2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

திருநெல்வேலி சைவச்சிறுவர் இல்ல மாணவர்களுக்கு ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் உதவி

Menaka Mookandi   / 2012 நவம்பர் 09 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் தீபாவளித்திருநாளை முன்னிட்டு திருநெல்வேலியில் உள்ள சைவச்சிறுவர் இல்ல மாணவர்களுக்கு பரிசுப்பொதிகள் வழங்கியுள்ளதோடு விசேட  மருத்துவமுகாம் ஒன்றையும் நேற்று வியாழக்கிழமை நடத்தியுள்ளது.

நேற்று மதியம் 2.00 மணிக்கு ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிராந்திய முகாமையாளர் சமிந்த பெரேரா தலைமையில் வருகை தந்த குழுவினர், சிறுவர் இல்லத்தில் உள்ள மாணவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சையினை வழங்கியதோடு மாலை 4.30 மணிக்கு சைவச்சிறுவர் இல்ல கேட்போர் கூடத்தில் மாணவர்களுக்கான விசேட உடமைப் பொதிகளையும் வழங்கியுள்ளனர்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிராந்திய முகாமையாளர் சமிந்த பெரேரா, 'நாடாளாவிய ரீதியில் உள்ள சிறுவர் இல்லங்களுக்கு இவ்வாறான உதவிகளை வழங்கிவருவதாகவும் இனிவரும் காலங்களில் எவ்விதமான உதவிகளை நீங்கள் கோரினாலும் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் வழங்கத் தயாராக இருப்பதாக' குறிப்பிட்டார்.

தேசிய ரீதியில் முன்னணி வகிக்கும் ஒரு நிறுவனம் இவ்வாறான உதவிகள் வழங்குவது மகிழ்சிக்குரிய விடயம் தான். தென்னிலங்கையில் இருந்து வருகை தரும் முதலாவது உதவி இது இல்லை என்றாலும் அவர்களின் சேவை முதன்மையானதாக அமைந்துள்ளது.

மாணவர்களுக்குத் தேவையான உடமைகள் வழங்கப்பட்டதைவிட ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் விசேட மருத்துவக் குழுவினர் கொண்டு வந்த மருந்துப் பொருட்களையும் சிறுவர் இல்லத்திற்கு வழங்கி இதனை மாணவர்களின் தேவைக்கு பயன்படுத்துமாறு தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தமது பணிச்சுமைகளுக்கு மத்தியிலும் இங்கு வந்து எமது மாணவர்களுடன் நீண்ட நேரம் இருந்து அவர்களுடன் கலந்துரையாடியுள்ளமை மகிழ்சியைத் தருகின்றது என்று சைவச்சிறுவர் இல்லத்தின் தலைவர் சோ.பத்மநாதன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .