2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

அரச துறையில் சேவையாற்றுவோருக்கு ஸ்ரீலங்கா டெலிகொம் மொபிடெலின் உபகார

A.P.Mathan   / 2012 நவம்பர் 14 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய கையடக்கத் தொலைபேசி வலையமைப்பான மொபிடெல் நிறுவனம், 2008ஆம் ஆண்டில், நாட்டின் தொலைத் தொடர்புத்துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தி, அரச துறையில் சேவையாற்றுவோருக்கு 'மொபிடெல் உபகார' பொதியை அறிமுகப்படுத்தியது. இவ்வாறு அரச ஊழியர்களுக்கு விசேட மாற்றத்தைக் கொண்டு வந்த 'மொபிடெல் உபகார' பொதிக்கு மேலும் பெறுமதிசேர்க்கும் வகையில், இப்போது புரட்சிகரமான இணையத்தள சேவையையும் அவர்களுக்கு வழங்கும் செயற்பாட்டை மொபிடெல் நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு அமைய, தொலைத் தொடர்புத் துறையில் வளர்ச்சியை ஏற்படுத்த, இந்நாட்டை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்றும் அரசின் தொலைநோக்கிற்கு அமைய, மொபிடெல் நிறுவனத்தின் மூலம் இதுவரை பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த விசேட இணையத்தள வசதியும், தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சுடன் இணைந்த ஒரு வேலைத் திட்டமாக இருப்பதுடன், இது அரச ஊழியர்களின் பணியைப் பாராட்டும் வகையிலான, அவர்களது பிள்ளைகளின் கல்வி அறிவில் வளர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு சிறந்த வேலைத்திட்டமாகும்.

மொபிடெல் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி லலித் டி சில்வா இது சம்பந்தமாக கருத்து தெரிவிக்கையில், 'தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்கென தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வரும் வேலைத்திட்டங்களுக்கு உறுதுணையாக, தேசிய கையடக்கத் தொலைபேசி வலையமைப்பான மொபிடெல் நிறுவனம் தொடர்ச்சியாக ஈடுபாட்டுடன் செயற்பட்டு வருகின்றது. கிராமத்திற்கு தகவல் தொழில்நுட்பத்தை கொண்டு செல்லும் வேலைத் திட்டத்திற்கு உதவும் வகையில், நாம் கிராமப்புறங்களில் எமது தகவல் நிலையங்களை ஆரம்பித்துள்ளோம். தனது தேசிய பொறுப்பை நன்கு விளங்கி, கையடக்கத் தொலைபேசித்துறையில் எந்தவொரு நிறுவனமும் இதுவரை ஆற்றல் எல்லையைப் பெற்றுத் தராத பிரதேசங்களையும் தேடிச் சென்று அவர்களுக்கும் தொலைத் தொடர்புத்துறையின் வளர்ச்சியின் அனுகூலங்களைப் பெற்றுக்கொடுக்க மொபிடெல் நிறுவனம் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

தகவல் தொழிநுட்ப துறைசார் அறிவினை அடிப்படையாக கொண்ட பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்த இலங்கையின் அனைத்து குடிமகனிடையேயும் தகவல் தொழிநுட்ப அறிவு மற்றும் அனுபவத்தினை மேம்படுத்த வேண்டுமென நாம் நம்புகின்றோம். அரச துறையின் தர மேம்பாட்டின் மூலம், நாட்டின் அபிவிருத்தி துரிதமடையும் என்பதனால், அரச ஊழியர்களின் சேவையைத் தொடர்ச்சியாகப் பாராட்டும் நிறுவனமாக, உலகின் நவீன தொலைத் தொடர்பு வசதிகளை அரச துறைக்கு தயங்காது பெற்றுக்கொடுத்து வருகின்றோம்.

மொபிடெல் உபகார பொதி, அரச துறை சார்ந்த உங்களுக்கு பொருளாதார ரீதியில் துணை புரிவதுடன், மொபிடெல் உபகார இணையத்தள வசதியின் மூலம் உங்களது வளர்ச்சியும், வெற்றியும் உறுதிப்படுத்தப்படுவதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்த சமப்படுத்த முடியாத புரட்சிகரமான சேவையின் மூலம், தற்போது உபகார பொதியை பயன்படுத்துவோருக்கு, இலவசமாக டொங்கிள்; ஒன்றை பெற்றுக்கொள்ள முடியும். மேலும், ரூபா 299 போன்ற மிகக் குறைந்த மாதாந்த கட்டணத்தில் இச்சேவையை பெற்றுக்கொள்ளும் வசதியும் கிடைக்கிறது'

இங்கு கருத்துத் தெரிவித்த தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, 'தகவல் தொழில்நுட்பம் என்பது, தற்காலத்தில் தொழிற்சாலைகள், சேவைகள் மற்றும் விவசாயத் துறையிலும் வளர்ச்சிக்கு மிகவும் தேவையான ஓர் அம்சமாகும். அத்துடன், தகவல் தொடர்பாடலின் கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றும் அதிமேதகு ஜனாதிபதியின் மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்திற்கு அமைய, அரச சேவையையும், தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் வலுப்படுத்துவது எமது அரசின் நோக்கமாகும். இந்த நோக்கத்தை யதார்த்தமாக்க தேவையான மாபெரும் செயற்பாடாக இன்று தேசிய கையடக்கத் தொலைபேசி வலையமைப்பான மொபிடெல் நிறுவனத்துடன் நாம் செயற்படுத்துகின்றோம். இதன் மூலம் நியாயமான கட்டணத்தில், இணையத்தள வசதிகளை பெற்றுக்கொண்டு, அரச ஊழியர்கள் தமது அறிவையும், ஆற்றலையும் மேலும் அதிகரித்துக்கொள்வார்கள்' என நான் நம்புகின்றேன்' எனத் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .