2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

மெகா வாசி சீட்டிலுப்பில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 நவம்பர் 17 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)

இலங்கை வங்கியின் மெகா வாசி 3ஆவது காலாண்டு சீட்டிலுப்பில் வெற்ற பெற்றவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை யாழ்.மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது

இலங்கை வங்கியின் வடபிராந்தியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில்இலங்கை வங்கியின் வடபிராந்திய செயற்பாட்டு முகாமையாளர் மாணிக்க சிங் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களை வழங்கி வைத்தார்.

மெகா வாசி சீட்டிலுப்பில் யாழ்.மாவட்டத்தில் 92 பேர் தெரிவு செய்யப்பட்டனர். இதில் 1 லட்சம் ரூபாய் பரிசு பெற்ற மூவர்களில் ஒருவருக்கு வெளிநாட்டுச் சுற்றுலா செல்வதற்கான வாய்ப்பும் ஏனைய இருவரும்  வீட்டுத்தளபாட கொள்வனவிறகான் பணப் பரிசில்களும் வழங்கப்பட்டன.
அத்துடன் 89 பேருக்கு 15 ஆயிரம் பெறுமதியான காகில்ஸ் பரிசுக் கூப்பனும் வழங்கப்பட்டுள்ளது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .