2021 ஜனவரி 27, புதன்கிழமை

ஸ்ரீலங்கா டெலிகொம்; அழையுங்கள், வெல்லுங்கள்!

A.P.Mathan   / 2012 நவம்பர் 19 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குனர்களான ஸ்ரீலங்கா டெலிகொம், வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த தொடர்பாடல் தீர்வுகளை வழங்குவதோடல்லாமல், அவர்களுக்குள் மறைந்துகிடக்கும் திறமைகளையும் வெளிக்கொணர்ந்து வெகுமதியளிப்பதில் முதல்வனாக விளங்குகின்றது. அந்தவகையில், எம் முன்னோர்களால், அறிவுத்திறனை கூர்மையாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட விடுகதைப் புதிர்ப் போட்டியினை ஸ்ரீலங்கா டெலிகொம் வாடிக்கையாளர்கள் மத்தியில் நடாத்த உள்ளது.

தமிழ் மற்றும் சிங்களமொழியின் பழம்பெரும் விடுகதைகளை மையப்படுத்தியே குறித்த இந்த போட்டி நிகழ்வு இடம்பெறுகின்றது. அழிந்துபோகும் நிலையிலுள்ள மறக்கப்பட்ட எமது பாரம்பரிய புதையல்களை இளம் தலைமுறையினர் மத்தியில் வெளிக்கொணர ஸ்ரீலங்கா டெலிகொம் மேற்கொண்ட முயற்சியே இந்தபோட்டியாகும்.

இந்த விடுகதைப் புதிர்ப் போட்டியில் கலந்துகொள்ளவதற்கு SLT சிற்றிலிங்க் மற்றும் மெகாலைன் இணைப்புகளிலிருந்து 1298 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு,  சரியான விடைகளை அளிப்பதன் மூலம், பெறுமதி வாய்ந்த வெகுமதிகளைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த ஊக்குவிப்பு போட்டி நிகழ்வு டிசெம்பர் 10ஆம் திகதி வரை இடம்பெறும்.

தமிழ் மற்றும் சிங்களமொழியின் விடுகதைகளை மையமாகக் கொண்ட இந்தப் போட்டி நிகழ்வு பல்விருப்பத் தெரிவு விடைகளை மையமாகக் கொண்டுள்ளது. ஸ்ரீலங்கா டெலிகொம் தொலைபேசியிலிருந்து தொடர்புகொள்ளும் போட்டியாளர்கள், சரியான விடையின் அடிப்படையில் பொருத்தமான தொலைபேசி விசைக் குறியீட்டை அழுத்தி அவர்கள் சரியானதெனக் கருதும் விடையை பதிவு செய்யலாம். ஒவ்வொரு விடுகதைக்கும் ஓரவளவு பொருத்தமான மூன்று விடைகள் இருக்கும். சரியான விடையளிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் போட்டியாளருக்கு 10 புள்ளிகள் வழங்கப்படும். பிழையான விடைகள் அளிக்கப்படுமிடத்து, போட்டியாளர் மீண்டும் ஒரு தடவை முயற்சி செய்யலாம். இரண்டாம் முறை அளிக்கப்பட்ட விடை சரியாயின் 05 புள்ளிகள் வழங்கப்படும். ஆயினும் பிழையான விடைகளுக்கு எந்தவிதப் புள்ளிகளும் குறைக்கப்படமாட்டாது.

குறித்த இந்தவிடுகதைப் போட்டி மூன்று கட்டங்களாக நடாத்தப்படும். ஒன்று முதல் 250 வரையிலான கேள்விகள் இலகுவான முதலாம் மட்டமாகவும், 251 முதல், 500 வரையான கேள்விகள் நடுத்தரத்திலான இரண்டாம் மட்டமாகவும், 501 முதல் 650 வரையான கேள்வித் தொகுதிகள் கடினமான மூன்றாம் மட்டமாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. போட்டியாளர், இடைநடுவில் தொலைபேசி தொடர்பை நிறுத்தினாலும், அடுத்த தடவை 1298இற்கு அழைக்கையில், விட்ட இடத்திலிருந்து தொடரமுடியும்.

அழையுங்கள், வெல்லுங்கள், விடுகதைகளுக்கு விடையளியுங்கள் போட்டி தொடர்பில் ;ஸ்ரீலங்கா டெலிகொம்மின் பிரதான சந்தைப்படுத்தல் அதிகாரி ரொஷான் களுஆராச்சி தெரிவித்ததாவது...

'முன்னைய காலங்களில் இன்றுபோல் பொழுதுபோக்கு மற்றும் நவீன விளையாட்டு சாதனங்கள் இல்லாத போதும் மக்கள் ஒன்று சேரும் போது விடுகதைகளை பரிமாறி, தமது பொழுதைப்போக்கியதோடு மட்டுமல்லாமல் அறிவையும் வளர்த்துக் கொண்டனர். விடுகதைகளை நோக்குமிடத்து எமது முன்னோர்கள் எவ்வளவு அறிவுடையவர்கள் என்பது எமக்கு புரியும். விடுகதைகள் வாய் மொழியாக தொன்று தொட்டு வருபவை, எந்தப் புத்தகத்தி;லும் எழுதப்பட்டிருக்கவில்லை. இன்றைய இளையோர் மத்தியில் இவற்றில் சொற்ப அளவு மட்டுமே பாவனையில் உள்ளது. இன்றைய வேகமான செயற்பாடுகள் மத்தியில் விடுகதைகளை பரிமாற நேரமும் அவற்றை சொல்லித்தரவும் யாரும் இல்லை. பாவனையில் இல்லாததால் முதியோர் மத்தியிலும் இவை மறக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது. ஸ்ரீலங்கா டெலிகொம்மின் இம்முயற்சியானது விலைமதிக்க முடியாத இந்த பாரம்பரிய சொத்துக்களை இன்றைய இளையோருக்கு வழங்குவதே ஆகும். புத்தாண்டு காலத்தில் ஸ்ரீலங்கா டெலிகொம் நடத்திய நாட்டார் பாடல் போட்டியும் இது போன்றதொரு முயற்சியே. அதன் வெற்றி போன்றே இம் முயற்சியும் வெற்றி பெறும் என்பது எமது நம்பிக்கை'

இந்த போட்டியில் கலந்துகொள்வதற்கான அழைப்புகளுக்கு நிமிடமொன்றிற்கு ரூ. 5 மற்றும் பொருத்தமான வரிகள் கட்டணமாக அறவிடப்படும். முழுமையான அதிகூடிய புள்ளிகளைப் பெறுபவர் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்படும் அதேநேரம், ஒன்றுக்குமேற்பட்டோர் ஒரேயளவு புள்ளியினைப் பெறுவார்களாயின், சீட்டிழுப்பு நடாத்தப்பட்டு வெற்றியாளர் தேர்வுசெய்யப்படுவார். இப்போட்டியில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெறுவோருக்கு முறையே ரூ. 25,000, ரூ. 15,000 மற்றும் ரூ. 10,000 பணப் பரிசில்களாக வழங்கப்படும். அத்துடன் ஆறுதல் பரிசுகளைப் பெறும் பத்துப்பேருக்கு ரூ. 5,000 வழங்கப்படும்.

பாடசாலைச் சிறுவர்கள் முதல் பள்ளி ஆசிரியர்கள், ஓய்வுபெற்றோர், இளைஞர் யுவதிகள் என அனைவரும் தமது விடுகதைப் புதிரைக் கண்டுபிடிக்கும் திறனை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், பணப் பரிசில்களையும் வெகுமதியாகப் பெற்றுக்கொள்ள ஸ்ரீலங்கா டெலிகொம்மின் இந்த விடுகதைப் புதிர்ப் போட்டி நிகழ்ச்சி வழியமைத்துக் கொடுக்கின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .