2021 ஜனவரி 27, புதன்கிழமை

யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்திற்கு வெள்ளி விருது

A.P.Mathan   / 2012 நவம்பர் 20 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


நம்பிக்கை என்ற வாக்குறுதியை கட்டியெழுப்பும் வகையில், அண்மையில் நடைபெற்ற SLIM அதிசிறந்த வர்த்தக நாம விருது விழாவில் 2011ஆம் ஆண்டுக்கான வர்த்தக நாம சேவை விருதினை வென்ற ஒரே காப்புறுதி நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனம் திகழ்கிறது.

'வருடத்திற்கான வர்த்தக நாம சேவை' விருதானது வங்கியியல் மற்றும் சில்லறை, காப்புறுதி பிரிவுகளுக்கு வழங்கப்பட்டது.

நிறுவனத்தின் வெற்றி குறித்து யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் டர்க் பெரேரா கருத்து தெரிவிக்கையில் 'எமது வாடிக்கையாளர்களுக்கு அவசியமான நேரத்தில் தரமான சேவைகளை வழங்கிய எமது பணியாளர்களை அடையாளப்படுத்தும் நோக்கில் வழங்கப்பட்ட இவ்விருது குறித்து பெரு மகிழ்ச்சியடைகின்றோம். எமது குழுவினர் குறித்து நான் பெருமையடைகிறேன்' என்றார்.

எமது வளர்ச்சிப் பாதையின் வீச்சு மற்றும் விவேகம் போன்றவற்றின் காரணமாக நாடு பூராகவும் எமது பிரசன்னத்தை நிலைநிறுத்திக்கொள்ள முடிந்துள்ளது என சந்தைப்படுத்தல் மற்றும் வாழ்க்கை பகிர்வு பிரிவின் பொது முகாமையாளர் ருக்மன் வீரரத்ன தெரிவித்தார். 'யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனமானது உயர் தொழில்நுட்பம் ஊடாக வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தகுந்த வகையிலான பணியாளர்களை தன்னகத்தே கொண்டுள்ளது'. இந் நிறுவனமானது தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பாடல் தீர்வுகளை உள்ளடக்கிய வகையில் விற்பனை பணியாளர்களுக்கு அவசியமான டெப்லட் கணினிகள், முதல் tri-lingual இணையத்தளம், online claim tracking processes மற்றும் வாடிக்கையாளர் சேவைகளை மேம்படுத்துவதற்கு நடமாடும் தொலைத்தொடர்பு தளங்களை ஏற்படுத்தி அதனூடாக சேவைகளை வழங்கி வருகிறது.

தற்போது, யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனமானது 4000 விற்பனை ஆலோசகர்களை நாடுபூராகவும் உள்ள 90 கிளைகளில் வேலைக்கு அமர்த்தியுள்ளது. நாடுபூராகவும் உள்ள 2000 வலையமைப்பானது சிறந்த சேவைத்தொகுதியினை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. 

யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனமானது 2012 ஆண்டு அரையாண்டுக்கான வருவாய் மற்றும் இலாபம் தொடர்பில் நிலையான வளர்ச்சி வீதத்தை காட்டியுள்ளது. 20 சதவீத வளர்ச்சி வீதத்தையும், அதே ஆண்டில் வரிக்கு பின்னரான இலாபமாக 31 சதவீதத்தையும் பெற்றுள்ளது. யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனமானது 2012ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் திகதிக்கு பின்;னர் 15.3 பில்லியன் ரூபா பெறுமதி கொண்ட ஆயுள் மூலதனத்தை தன்னகத்தே கொண்டு, இத்துறையில் மிகப்பெரிய ஆயுள் மூலதனத்தை கொண்ட ஒரே நிறுவனமாக திகழ்கின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .