2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

கிழக்கிலங்கையின் முதலாவது லிப்ட் வசதியுடன் கூடிய வர்த்தக நிலையம்

A.P.Mathan   / 2013 ஜூலை 20 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம.றம்ஸான்
 
கிழக்கிலங்கையின் முதலாவது லிப்ட் வசதியுடன் கூடிய சாய்ந்தமருது பெமிலி சொய்ஸ் நவீன காட்சியறை நேற்று வெள்ளிக்கிழமை மாலை நிறுவனத்தின் ஸ்தாபகரும், ஓய்வுபெற்ற அதிபரும், சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவருமான அல்ஹாஜ் வை.எம்.ஹனீபா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
 
இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகவும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ஏ.ஆர்.எம்.மன்சூர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.எம்.ஏ.றஸாக் (ஜவாட்), சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
 
ஆயிரத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் கலந்து கொண்ட இத்திறப்பு விழாவின்போது இப்தார் வைபவமும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

  Comments - 0

  • pathmadeva Sunday, 21 July 2013 07:07 AM

    எனக்குத் தெரிந்த வரையில் மட்டக்களப்பு நகரிலுள்ள மாடிக்கட்டிடமான ஓர் உணவகத்தில் ஏற்கனவே மின்னுயர்த்தி (லிஃப்ட்) வசதி ஏற்படுத்தப்பட்டு விட்டது! எனவே இதை “முதலாவது“ என்று கூற முடியுமா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--