2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

ஒரெஞ்ச் எலட்ரிக்ஸ் கொடுக்கல் வாங்கல் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்கள்

A.P.Mathan   / 2013 ஜூலை 22 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் மின் உதிரிப்பாக உற்பத்தியில் முன்னிலை நிறுவனமாக விளங்கும் ஒரெஞ்ச் எலட்ரிக்ஸ் நடத்திய சி.எப்.எல் மின்குமிழ் பிரசார ஊக்குவிப்பு போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. 
 
நாவின்னையிலுள்ள ஒரெஞ்ச் பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற பரிசில்கள் வழங்கும் நிகழ்வில்  வெற்றியாளர்களுக்கு பெறுமதிவாய்ந்த சுசூகி ஸ்விட் கார் ஒன்று, ஐந்து ரிவிஎஸ் மோட்டார் சைக்கிள்கள், 20 சோபா, இரண்டு கதவுகளை கொண்ட 20 குளிர்சாதனப் பெட்டிகள், 25 LED  தொலைக்காட்சி பெட்டிகள், 30 சைக்கிள்கள் உட்பட பல பரிசில்கள் வழங்கப்பட்டன. 
இதன்போது சுசூகி ஸ்விட் காரை மொரட்டுவையைச் சேர்ந்த எம்.ஜி.ஜேம்ஸ் வென்றெடுத்ததுடன் அவர்  பாடசாலைகளுக்கு மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன் சாரதியாக கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.  
 
தமது வெற்றி தொடர்பாக கருத்து தெரிவித்த எம்.ஜி.ஜேம்ஸ், இந்த போட்டியில் கார் எனக்கு பரிசாக கிடைத்திருக்கின்றது என்ற செய்தியை நம்பவில்லை. ஒரெஞ்ச் எலட்ரிக்ஸிடமிருந்து நான் வெற்றியாளர் என்ற தகவல் கிடைத்தவுடன் அதிக பரபரப்புக்குள்ளானேன். நான் ஒரு பணக்காரன் அல்ல. எனது வாழ்க்கையை கொண்டு செல்வதில் அதிக கஷ்டத்தை எதிர்கொண்டேன். பாடசாலைகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகன சாரதியாக பணியாற்றுகின்ற எனக்கு இப்பரிசு நிச்சயம் வாழ்க்கையை வளமாக்கும். பத்திரிகையில் வாசித்தே இந்த போட்டிக்கு எனது விண்ணப்பத்தை அனுப்பினேன். இன்று ஒரு காருக்கு நான் உரிமையாளராகியுள்ளேன். ஒரெஞ்ச் நிறுவனத்துக்கு நன்றிகள்' என தெரிவித்தார்.  
 
ஒரெஞ்ச் சீஎப்எல் மின்குமிழொன்றை வாங்கும்போது அதிலுள்ள மேல் உறையை அனுப்புவதன்மூலம் சீட்டிழுப்பில் பங்குபற்றக்கூடிய வாய்ப்பு பாவனையாளர்களுக்கு கிடைத்தது. அத்துடன் புதிய ஒரெஞ்ச் சிஎப்எல் மின்குமிழொன்றை வாங்கும் அதேநேரம் மேலும் எந்தவொரு வர்த்தக நாமத்தையும் கொண்ட பழைய சிஎப்எல் மின்குமிழொன்றை கையளிக்கும் பாவனையாளர்களுக்கு சீட்டிழுப்பில் பங்குபற்றுவற்கான மேலதிக கூப்பனொன்றும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  
 
சிஎப்எல் மீள்சுழற்சி கட்டமைப்பை கொண்டுள்ள இலங்கையின் ஒரே நிறுவனமாக ஒரெஞ்ச் இலட்ரிக்ஸ் நிறுவனமே உள்ளது. முழு தெற்கு ஆசியாவுக்கும் உள்ள ஒரே கட்டமைப்பும் இதுவாகும். 'சீஎப்எல் கனுதெனு' (கொடுக்கல் வாங்கல்) ஊக்குவிப்பு ஊடாக சுற்றாடலை பாதுகாக்க வேண்டியது அனைவரது பொறுப்பு என்பதை ஒரெஞ்ச் உணர்த்தி நின்றது. 
 
ஒரெஞ்ச் எலட்ரிக்ஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின் மேலதிக பொது முகாமையாளர் அமீன் கானி கருத்து தெரிவிக்கையில்,சிஎப்எல் மின்குமிழ்களை ஊக்குவிக்கும் அதேநேரம் அவற்றின் எதிர்மாறான தாக்கங்கள் தொடர்பாகவும் நாம் கவனம் செலுத்த வேண்டும். ஆகையால் தான் இந்த செயற்றிட்டத்தை நாம் ஆரம்பித்தோம். இந்த ஊக்குவிப்பானது சமூக பொறுப்பு வாய்ந்தது. இது எமது விற்பனையை அதிகரிப்பது அல்ல. சுற்றாடலையும்  பாதுகாக்க வேண்டும் என்பதே நோக்கம். நாம் அனைவரும் அதில் உள்ளடங்க வேண்டும். அத்துடன் ஒரெஞ்ச் நிறுவனத்தால் முன்னெடுக்கப்படுகின்ற 'எதிர்காலத்துக்காக இயற்கையை பாதுகாப்போம்' என்ற திட்டத்திற்;கு அனைவரும் உதவ வேண்டும். ஒளிராத மின்குமிழ்களை குப்பைத் தொட்டியில் போடுவதற்கு பதிலாக எந்த குறியீட்ட நாமத்தை கொண்ட சிஎப்எல் மின்குமிழ் என்றாலும் அதனை   அருகிலுள்ள ஒரேஞ்ச் வர்த்தகரிடம் கையளித்துவிட்டு. புதிய ஒரெஞ்ச் மின்குமிழொன்றை வாங்கும்போது 10 ருபா விலைக்கழிவை பெற்றுக்கொள்ளலாம்;' என தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X