2021 மார்ச் 06, சனிக்கிழமை

பயணங்களை இலகுவாக்கும் குவைட் எயார்வேய்ஸ்

A.P.Mathan   / 2014 மார்ச் 29 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


செலான் வங்கி கடனட்டையானது அதன் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு வெளிநாட்டுப் பயணங்களை இலகுவாக்கும் நோக்கத்துடன் அண்மையில் குவைத்தின் தேசிய விமானசேவையான குவைட் எயார்வேய்சுடன் இணைந்துள்ளது.

செலான் வங்கி கடனட்டை வைத்திருப்போர் அதிகுறைந்த வட்டிவீதத்தில் 3, 6 மற்றும் 12 மாத தவணையில் குவைட் எயார்வேய்ஸ் பயணச்சீட்டுகளை தற்போது கொள்வனவு செய்யலாம். அதற்கு மேலதிகமாக அந்தப் பயணிகள் மேலும் 10 கிலோ பொதியை கொண்டு செல்ல முடிவதுடன், ஆசனத்தை தெரிவு செய்யும் வசதியும் வழங்கப்படும்.

இந்த அனுபவத்துக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாம் லோஞ்ச்சின் (Palm Lounge) இலவச பயன்பாடு மற்றும் குவைட் எயார்வேய்சின் ஒஆசிஸ் வெகுமதி (Oasis Rewards) நிகழ்ச்சித்திட்டத்தில் இலவசமாக சேர்க்கை ஆகியன அமைந்துள்ளன.

குவைட் எயார்வேய்சின் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான பிராந்திய விற்பனை முகாமையாளர்  சுதேஷ் ரூபசிங்க தெரிவிக்கையில், 'எமது வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதியை வழங்க செலான் வங்கியுடன் இணைவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். இலகு தவணைக் கொடுப்பனவு பலதரப்பட்ட சிரமங்களை அகற்றுவதுடன், வெளிநாட்டுப் பயணங்களை மகிழ்ச்சிகரமானதாக்குகின்றது. இந்த பயணிகளை எமது குவைட் எயார்வேய்ஸ் Oasis வெகுமதி நிகழ்ச்சித்திட்டத்தில் சேர்த்து பலதரப்பட்ட வசதிகளை வழங்குவதையிட்டும் சந்தோசமடைகின்றோம்' என்றார்.

செலான் கடனட்டை மூலம் தமது பயணச்சீட்டை கொள்வனவு செய்யும் குவைட் எயார்வேய்ஸ் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக டிரவலர்ஸ் அட்டையையும் செலான் வங்கி வழங்கும்.

நுகர்வோர் வங்கித்துறைக்கான சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளர் திஸ்ஸ நாணயக்கார, 'ஒரு சிறப்பான பயணத் துணையான செலான் பயண அட்டையானது விசா அனுமதியளிக்கப்பட்ட முற்பணம் செலுத்தும் அட்டையாகுவதுடன், வெளிநாட்டு நாணயங்களை கொண்டு செல்வதற்கும் ஒரு காலத்தில் அதி விருப்புக்குரியதாக திகழ்ந்த டிரவலர்ஸ் செக்குக்கும் பதிலாக பயன்படுத்தப்படும். இந்த பயண அட்டையானது உலகின் எப்பாகத்திலும் உபயோகிக்கும் விதத்தில் குறிப்பிட்ட ஐந்து வெளிநாட்டு நாணயத்தில் நிரப்பப்பட முடியும்' எனத் தெரிவித்தார்.

'அமெரிக்க டொலர், ஸ்டேர்லின் பவுண்ட்ஸ், யூரோ, சவூதி ரியால் மற்றும் அவுஸ்திரேலிய டொலரில் வழங்கப்படும் செலான் பயண அட்டையானது உலகம் முழுவதும் 30 மில்லியனுக்கு அதிகமான விற்பனை நிலையங்களிலும் 2.2 மில்லியன் விசா அங்கீகரிக்கப்பட்ட ATM நிலையங்களிலும் உபயோகிக்க முடியும். இந்த வசதியை குவைட் எயார்வேய்ஸ் பயணிகளுடன் பகிர்ந்து கொள்வதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம்' என நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

குவைட் எயார்வேய்ஸ் சிறந்த இணைப்புகளுடன் கொழும்பிலிருந்தும், கொழும்புக்குமாக ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுக்கு வாரத்துக்கு ஆறு விமானச் சேவைகளை இயக்குவதுடன், கொழும்பிலிருந்து காலைச் சேவைகளை வழங்குகின்றது. மேலதிகமாக, குவைத்தினூடாக கொழும்பு மற்றும் நியூயோர்க்குக்கிடையிலான விமானச்சேவைக்கு டிரான்சிட் விசா அவசியமில்லை.

ரோம் / பாரிஸ் / ரோம், ஜெனீவா / ஃபிராங்ஃபர்ட் / ஜெனீவா மற்றும் லண்டன் / நியூயோர்க் / லண்டன் ஆகிய வழிகள10டாக தங்களின் தெரிவான மேலதிக இடங்களை கொண்டதாக, வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு உள்ளடங்கலாக சாதாரணம் முதல் வியாபார வகுப்பு வரை சிறந்த கட்டணங்கள் பயணிகளுக்கு வழங்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .