2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பதிவு செய்யப்படாத, மோசடியான கையடக்க தொலைபேசிகளுக்கு இலங்கையில் தடை?

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 07 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதிவு செய்யப்படாத மற்றும் மோசடியான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படும் கையடக்க தொலைபேசிகளை தொலைபேசி வலையமைப்புகள் தடைசெய்வதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என சம்சுங் நிறுவனத்தின் இலங்கைக்கான தலைமை அதிகாரி மஞ்சுள தஹநாயக்க கருத்து தெரிவித்திருந்தார்.

இவ்வாறு நாட்டினுள் கொண்டு வரப்படும் தொலைபேசிகள் இலங்கையின் தொலைத்தொடர்புகள் வலையமைப்புகளிலிருந்து தடைசெய்யப்படும் எனவும், ஒரு வலையமைப்பிலிருந்து மற்றுமொரு வலையமைப்புக்குரிய சிம் அட்டையை பயன்படுத்தினால் கூட அந்த கையடக்க தொலைபேசியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் என அறிவித்திருந்தார்.

பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுற்றாடல் தொடர்பான சிக்கல்களை தவிர்க்கும்  வகையில் இந்த செயற்பாட்டை அறிமுகம் செய்ய வேண்டிய தேவை காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் ஸ்மார்ட்போன்கள் சந்தையில் சம்சுங் கையடக்க தொலைபேசிகள் முன்னணியில் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .