2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

பொருளாதார அபிவிருத்தியில் இலங்கை முன்னோடியாக திகழும்: உலக வங்கி

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 11 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்காசிய பிராந்தியத்தில் பொருளாதார அபிவிருத்தியில் இலங்கை முன்னோடியாக திகழும் என உலக வங்கி அறிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் 7.3 வீத பொருளாதார அபிவிருத்தியை இலங்கை பதிவு செய்யும் எனவும், இதில் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் உட்கட்டமைப்பு தொடர்பிலான முதலீடுகள் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் பெருமளவு பங்களிப்பை செலுத்தும் எனவும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

தெற்காசிய பிராந்தியத்துக்கான பொருளாதார எதிர்வுகூறல் 5.2 வீதமாக அமைந்துள்ள நிலையில், இந்தியா 5.7 வீதம், பாகிஸ்தான் 4 வீதம், நேபாளம் மற்றும் மாலைதீவுகள் 4.5 வீதம், பங்களாதேஷ் 5.4 வீதம் மற்றும் ஆப்கானிஸ்தான் 3.2 வீத அதிகரிப்பு ஆகியவற்றை பதிவு செய்யும் என அறிவித்துள்ளது.

ஆனாலும், இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் போன்ற பெருமளவு நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள அரச தாபனங்களை மறுசீரமைப்பு செய்வது குறித்து கவனம் செலுத்துவது உகந்தது எனவும் குறிப்பிட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--