2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

இலங்கை துறைமுக அதிகார சபையின் வருமானத்தில் வீழ்ச்சி

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 22 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை துறைமுக அதிகார சபையின் இலாபம் கடந்த ஆண்டில் 2.4 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்ததாகவும், இந்த பெறுமதி 2012ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 53.4 வீத வீழ்ச்சி எனவும் அதன் வருடாந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் அதிகார சபையின் வருமானம் 37.2 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்ததாகவும், 2012ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த பெறுமதி 2.3 வீத வீழ்ச்சி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆயினும், கடந்த ஆண்டில் துறைமுகங்களின் மூலம் கையாளப்பட்ட கொள்கலன்களின் எண்ணிக்கை முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2.8 வீத அதிகரிப்பை பதிவு செய்திருந்ததாகவும், மொத்த செலவீனம் 5.8 வீதத்தால் அதிகரித்து 34.8 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--