2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

சர்வதேச கல்விக் கண்காட்சி

A.P.Mathan   / 2014 ஜூலை 02 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


சர்வதேச கல்விச் சேவைகள், வழிகாட்டல்கள் மற்றும் மாணவர்களுக்கு வெளிநாட்டு கல்வி வாய்ப்புகளை பெற்றுக் கொள்ள உதவும் சேவைகளை இலங்கையில் வழங்கும் யுAspirations Education (AE) தொடர்ச்சியான 8வது வருடமாக இலங்கையில் சர்வதேச கல்விக் கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஆண்டின் கண்;காட்சி ஜுலை மாதம் 5 ம் திகதி முதல் 6 ம் திகதி வரை கொழும்பு, தாஜ் சமுத்திரா ஹோட்டலின், லோவர் கிறிஸ்டல் போல்ரூம் பகுதியில் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இடம்பெறவுள்ளது. 
 
இந்த கண்காட்சி முற்றிலும் இலவசமான சேவையாக அமைந்துள்ளதுடன், 25 அங்கீகாரம் பெற்ற சர்வதேச பல்கலைக்கழக மற்றும் கல்வியக பிரதிநிதிகளை அவுஸ்திரேலியா, பிரித்தானியா, மலேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளிலிருந்து பங்குபற்ற ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் இலங்கையின் மாபெரும் சர்வதேச கல்விக் கண்காட்சியாக இந்த கண்காட்சியை Aspirations Education (AE) ஏற்பாடு செய்துள்ளது. 
 
Aspirations Education (AE) தலைவர் அஜித் அபேசேகர கருத்து தெரிவிக்கையில், 'Aspirations Education (AE)  சர்வதேச கண்காட்சியின் மூலம் இலங்கையை சேர்ந்த மாணவர்களுக்கு சர்வதேச கல்வியகங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் தரங்கள் குறித்த முதற்கட்ட அனுபவத்தை பெற்றுக் கொள்ள முடியும். தொடர்ச்சியாக 8வது தடவையாக இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்வதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். மாணவர்களுக்கு பரந்த கல்வி வாய்ப்புகளை பற்றி அறிந்து கொள்ள முடியும். சர்வதேச பிரதிநிதிகளுடன் உரையாடி வெவ்வேறு நாடுகளில் தமக்கு காணப்படும் வாய்ப்புகளை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். அத்துடன், பெற்றோருக்கும் தமது பிள்ளைகளுக்கு வழங்கக்கூடிய சிறந்த கல்வி வாய்ப்புகள் பற்றி அறிந்து கொள்வதுடன், அதற்கான நிதித் தேவைகளை முன்கூட்டியே தயார்ப்படுத்தக்கூடிய வழிகாட்டியாகவும் அமையும்' என்றார்.
 
இந்த முறை கண்காட்சியின் போது அனுமதி புலமைப்பரிசில் பரீட்சைகள், உடனடி அனுமதிகள் கழிவுகள், கண்காட்சி வாரத்தின் போது விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு அனுமதிக்கட்டணத்தை விலக்கழிப்பு செய்யும் 'விண்ணப்ப வாரம்', Monash வினாவிடைப் போட்டி மற்றும் மேலும் பல நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. மாணவர்கள் தம்மை மேற்படி சலுகைகளுக்கான தகைமைகளை பெற்றுக் கொள்ள www.aspirtions.edu.lk/2014 எனும் பக்கத்துக்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம்.
 
மேலும், இந்த கண்காட்சியின் போது விஞ்ஞானம் மற்றும் மருத்துவ கற்கைகளுக்கென விசேட பகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கற்கைகளை முன்னெடுப்பதற்கான புதிய பிரதேசமாக வியட்நாம் பற்றிய அறிமுகங்களும் அந்நாட்டில் காணப்படும் கல்வியங்கள் பற்றிய விபரங்களையும் பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் அவுஸ்திரேலியாவின் RMIT பல்கலைக்கழகத்தின் தகைமையை ஆசிய கலாசாரம் நிலவும் வியட்நாமிலிருந்து குறைந்த செலவில் பெற்றுக் கொள்வது பற்றிய விபரங்களையும் பெறலாம். 
 
8வது கல்விக் கண்காட்சியில் பங்குபற்றும் பல்கலைக்கழகங்கள் பற்றிய விபரங்களை பெற்றோரும் மேற்படி இணையப்பக்கதிலிருந்து பார்வையிட முடியும். மேலதிக விபரங்களை 0777 539 888 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெறலாம். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .