2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

'தீவா காணி அதிர்ஷ்டம்': இரண்டாவது வெற்றியாளர் தெரிவு

A.P.Mathan   / 2015 ஓகஸ்ட் 02 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக முன்னெடுக்கப்பட்டு வரும் 'தீவா காணி அதிர்ஷ்டம்' திட்டத்தில் கொழும்பை அண்மித்து பெறுமதிமிக்க இரண்;டாவது காணியை வென்ற அதிர்ஷ்டசாலியாக கருணாதிலக தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைத்த அமோக வரவேற்பு காரணமாகமே ஐந்தாவது வருடமாகவும் இத் திட்டத்தினை தீவா முன்னெடுத்துள்ளது.

நான்கு கட்டங்களின் கீழ் இடம்பெற்ற இத்திட்டத்தின் ஊடாக கொழும்பை அண்மித்து இதுவரை தலா 1 மில்லியன் ரூபா பெறுமதியான 16 காணித்துண்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இம்முறை 'தீவா காணி அதிர்ஷ்டம்' ஊக்குவிப்பு திட்டம் மூலமாக காணி வரத்தை வென்ற அதிர்ஷ்டசாலியாக தெரிவு செய்யப்பட்ட கருணாதிலக பிரனாந்து சின்னபாதுவ பிரதேசத்;தை வதிவிடமாக கொண்டவராவார். பாடசாலை அதிபராக பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ள பிரனாந்து நினைத்துப் பார்க்க முடியாத நேரத்தில் தமக்கு கிடைத்த இந்த வெற்றி குறித்து நம்மோடு இவ்வாறு பகிர்ந்து கொண்டார்.

'தீவா காணி அதிர்ஷ்டம் குழுவினர் எமது வீட்டிற்கு வந்து அறிவித்த பின்னரே இந்த நற்செய்தியை நாம் தெரிந்து கொண்டோம். இத்தனையாண்டு காலம் நாம் அரசு வழங்கிய காணியிலேயே குடியிருந்தோம். நாம் வசிக்கும் பிரதேசம் கொழும்பிற்கு மிக தொலைவில் இருப்பதால் எண்ணற்ற துன்பங்களுக்கு முகம் கொடுத்தோம். இதனால் கூடிய விரைவில் நகரத்தில் குடியேறுவதற்கான எதிர்பார்ப்பும் மனதில் இருந்தது. அந்த கனவை நனவாக்கிக் தந்த ஹேமாஸ் நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்; கொள்கிறேன்' என்றார்.

தாம் நீண்டகாலமாக தீவா உற்பத்திகள் மீது நம்பிக்கை வைத்திருந்ததாகவும், தீவா மூலம் அறிமுகம் செய்யப்பட்ட இரு புதிய நறுமணங்களையும் தமது வீட்டிலுள்ள அனைவரும் மிக விரும்பியதாகவும் பிரனாந்து அவர்கள் தெரிவித்தார்.

'எதிர்காலத்திலும் அந்த விசுவாசத்தை வென்று மேலும் பல வெற்றியாளர்களை உருவாக்குவதற்காக சக்தி தீவா காணி அதிர்ஷ்டம் குழுவினருக்கு கிடைக்க வேண்டுமென இறைவனை பிரார்த்திக்கின்;றேன.' என மேலும் தெரிவித்தார்.

தீவா காணி அதிர்ஷ்டம் செயற்திட்டத்தின் முதலாவது காணியை கேகாலை துலீகா பிரியதர்ஷனி வென்றெடுத்ததுடன், கொழும்புக்கு அருகாமையில் காணியை சொந்தமாக்கிக் கொள்வதற்கான வாய்ப்பு மேலுமொரு அதிர்ஷ்டசாலிக்கு கிடைக்கவுள்ளது. இந்த ஊக்குவிப்பு செயற்திட்டம் ஜுலை மாதம் 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதுடன், இதுவரை போட்டிக்கு விண்ணப்பிக்காத வாடிக்கையாளர்களுக்கு தற்போது சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியதெல்லாம் எந்தவொரு தீவா வெற்று மேலுறைகளையும்(புதிய மேம்படுத்தப்பட்ட தீவா, தீவா ஃபிளவர்ஸ் அல்லது தீவா சவர்க்காரம்) 'தீவா காணி அதிர்ஷ்டம்' த.பெ.இல. 1289, கொழும்பு எனும் முகவரிக்கு தமது பெயர், முகவரி மற்றும் தொலைபேசி இலக்கத்தை குறிப்பிட்டு அனுப்ப வேண்டியது மட்டுமேயாகும்.

இதற்கு மேலதிகமாக மாதாந்தம் காணிகள், வாராந்தம் தங்க நாணயங்கள் மற்றும் நாளாந்தம் 10,000 ரூபா வீதம் பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .