2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

busseat.lk

Shanmugan Murugavel   / 2015 ஓகஸ்ட் 06 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முருகவேல் சண்முகன்

இதுவரை நிலவி வந்த தனியார் பஸ் பதிவு சேவையின் நெருக்கடியை தீர்க்கும் முகமாக busseat.lk, கடந்த மாதம் 27ஆம் திகதி தனது சேவையை ஆரம்பித்திருக்கிறது.

Yarl IT Hubஇனால் நடத்தப்பட்ட Yarl Geek Challenge 3இல் வெற்றிபெற்று, Lankan Angel Network நிறுவனத்தால் வெற்றி பெற்ற திட்டத்தை ஆரம்பிப்பதற்கு பணம் வழங்கப்பட்டிருந்த Techkitez அணியினரின் வெளியீடாகவே busseat.lk வெளிவந்திருக்கின்றது.

இலங்கையின் குடிசனத்தொகையில் இருபதுக்கு அதிகமான சதவீதத்தினரால் இணையமானது பயன்படுத்தப்படுகின்றது என அண்மையில் வெளியான தரவுகள் தெரிவிக்கின்ற நிலையில், பஸ் பயணச்சீட்டுக்கான முற்பதிவுகளை மேற்கொள்ளுதலை இலகுவாக்குதலை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இவ் இணையத்தளமானது, தமது அன்றாடத்தேவைகளை நிறைவேற்ற இணையத்தை பயன்படுத்துவோருக்கு வரப்பிரசாதமாக அமையவுள்ளது.

தற்போது யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்குமிடையேயான சேவைகளை கொண்டிருக்கின்ற இந்த இணையத்தளமானது எதிர்வரும் வார இறுதியில் இருந்து கொழும்பு-மட்டக்களப்பு, கொழும்பு-அம்பாறைக்கிடையேயான தனது சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது.

இவ்இணையத்தளத்தின் மூலம் வெங்கடேஸ்வரா எக்ஸ்பிரஸ், தாஸ் எக்ஸ்பிரஸ், கியூ லைன்ஸ், பிகே ட்ரவல்ஸ், முத்து ட்ரவல்ஸ், அம்பாள் எக்ஸ்பிரஸ், எல்மோ எக்ஸ்பிரஸ் ஆகிய யாழ்-கொழும்புக்கிடையே சேவையில் ஈடுபடும் பஸ்களின் முற்பதிவை மேற்கொள்ள முடியும் என்பதுடன்  எதிர்வரும் வார இறுதி முதல் அன்னை முத்துமாரி, நோர்த் வெஸ்ட், தினகரன், என்.சி.ஜி ஆகிய பஸ்களுக்கும் முற்பதிவுகளை மேற்கொள்ள முடியுமென்று தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கொழும்பு-மட்டக்களப்புக்கிடையே ஸீனா எக்ஸ்பிரஸ், சுரேனா, ரோயல் எக்ஸ்பிரஸ் ஆகிய பஸ்களுக்கான முற்பதிவை எதிர்வரும் வார இறுதி முதல் மேற்கொள்ள முடியுமென்பதுடன், கொழும்பு-அம்பாறை இடையே ரைசூன் ட்ரவல்ஸ் பஸ்சுக்கான முற்பதிவையும் எதிர்வரும் வாரம் இறுதி முதல் மேற்கொள்ளமுடியும்.
முற்பதிவுகளை இந்த இணையத்தளத்தில் மேற்கொள்ளும்போது விசா, மாஸ்டர், அமெக்ஸ் கிரடிட் கார்ட் அல்லது டெபிட் கார்ட் மூலமாகவே அல்லது டயலொக், எடிசலாட், ஹச் இணைப்புக்களின் eZ cash அல்லது மொபிட்டெல் இணைப்பின் mCash மூலமாகவோ கட்டணங்களை செலுத்திக்கொள்ள முடியும்.

இருபத்து நான்கு மணித்தியாலங்களும் முற்பதிவுகளை மேற்கொள்ளும் வசதி, இருபத்து நான்கு மணி நேர அலைபேசி உதவிச் சேவை, முற்பதிவுகளின் போது அதை உறுதிப்படுத்தும் SMS,  நிறுத்தப்படும் முற்பதிவுகளுக்கு பஸ் உரிமையாளர்களின் அனுமதியுடன் பணம் மீளக்கையளிப்பு, பெண்களுக்கான தனித்த ஆசனத்தெரிவு போன்ற சேவைகளை தன்னகத்தே கொண்டுள்ளதுடன் மிகுந்த நம்பகத்தன்மையையும் இந்த இணையத்தளம் கொண்டுள்ளது.    

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .