2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

அகலவத்த பிளான்டேஷன் நிர்வாகம் கைமாற்றம்

Gavitha   / 2016 ஜூலை 17 , பி.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

க்வுட்ஸ் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்பட்டு வந்த அகலவத்தப் பிளான்டேஷன் நிறுவனத்தின் பங்குகளைப் பிரவுண்ஸ் குழுமத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. 304 மில்லியன் ரூபாய் பெறுமதியானப் பங்குகள் இவ்வாறு விற்பனையாகியிருந்தன.

அகலவத்தப் பிளான்டேஷனின்  15.2 மில்லியன் பங்குகளில் 60.8 சதவீதம், சந்திப்புகள் ஊடாக பங்கொன்றுக்கு 20.00 ரூபாய் வீதம் கைமாற்றப்பட்டிருந்தது.

இந்தக் கொடுக்கல் வாங்கல் கொழும்பு பங்குச்சந்தையில் வியாழக் கிழமைப் பதிவாகியிருந்தது. பெருந்தோட்டத்துறை எதிர்நோக்கியுள்ள பாரிய சரிவைக் கவனத்தில் கொண்டு, இந்தத் தீர்மானத்தை தாம் மேற்கொண்டதாக மெக்வுட்ஸ், ஊடகங்களுக்கு அறிவித்திருந்தது. ரஷ்யாவில் நிலவும் அமைதியற்ற நிலை மற்றும் ரூபிள் பெறுமதி வீழ்ச்சி போன்றன காரணமாகவும், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியற்ற நிலை மற்றும் எரிபொருட்களின் விலை வீழ்ச்சிப் போன்றவற்றால் இந்நாடுகளின் கொள்வனவு ஆற்றல் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன் காரணமாகக் கடந்த சில வருடங்களாகவே, அத்தியாவசியப் பொருட்கள் சரிவை எதிர்நோக்கியுள்ளன. இதன் காரணமாக மெக்வுட்ஸ் நிறுவனத்தின் வசமிருந்த 304 மில்லியன் ரூபாய் பெறுமதியான பங்குகளைப் பிரவுண்ஸ் குழுமத்துக்கு விற்பனை செய்ய தமது பங்காளர்கள் அனுமதி வழங்கியிருந்ததாக குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை மெக்வுட்ஸ் செக்கியுரிட்டீஸ் பெரும்பான்மை பங்காளர்கள் தமது அனுமதி இன்றி இந்த கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .