2021 ஜனவரி 23, சனிக்கிழமை

மகிழ்ச்சிகரமானவிடுமுறை கால உல்லாசப் பயண வாகன அணி

Gavitha   / 2016 ஜூலை 17 , பி.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் வாகனங்களை விடுமுறை இல்லங்களாகப் பயன்படுத்தும் Caravan) புதியக் கருப்பொருளை ‡பெயார்வே ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனமான கோ அவுட்டோர்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. நாடு முழுவதும் குறிப்பாக குடும்பங்களும் இன்னும் தனி நபர்களும் இதைப் பயன்படுத்த முடியும்.

இந்தத் திட்டத்தில் இணைத்துக் கொள்ளக்கூடிய தனிநபர் கம்பனிகளைப் பட்டியலிடும் முக்கியமான விடயம் இப்போது இடம்பெற்று வருகின்றது. இங்கு பிரத்தியேகமான இந்தக் கரவன்களையும் மோட்டார் வாகன இல்லங்களையும் நிறுத்தி வைக்க முடியும்.

வாடிக்கையாளர்கள் இதற்கான கரவன்களை அல்லது வீடுகளை வாடகைக்குப் பெற்றும் பயன்படுத்த முடியும்.
கரவன்கள் மற்றும்; வாகன வீடுகள் ஆகிய இரண்டும் வித்தியாசமானவை. அவை ஓட்டிச் செல்லப்படுகின்றனவா அல்லது இழுத்துச் செல்லப்படுகின்றனவா என்பதைப் பொறுத்தே இந்த வித்தியாசம் அமையும்.

விடுமுறை இல்லங்களாக வடிவமைக்கப்படும் கரவன்களை உரிய இடத்துக்கு இழுத்துச் செல்ல ஒரு வண்டி தேவைப்படும். ஆனால், மோட்டார் வாகன வீடுகளை உரியவர்களே ஓட்டிச் செல்ல முடியும்.

இலங்கையில் இது ஒரு புதிய அனுபவமாகும். வாடிக்கையாளர்கள் கோ அவுட்டோர்ஸ் நிறுவனத்திடமிருந்து கரவன்களை அல்லது மோட்டார் வாகன வீடுகளைக் கொள்வனவு செய்யவோ அல்லது வாடகைக்குப் பெற்றுக் கொள்ளவோ முடியும். உல்லாசப் பயண விடுமுறைக்கென்று விஷேட நோக்கில் வடிவமைக்கப்பட்ட இவற்றை நாட்டின் பிரபலமான 17 விடுமுறைத் தரிப்பிடங்களில் நிறுத்தி வைக்க முடியும்.

கோ அவுட்டோர்ஸ் பல்வேறு விதமான கரவன்களைக் கொண்டுள்ளது. இவை முழு அளவிலான வசதிகள் கொண்டவை. ஒரு விடுமுறையைத் தொடங்கியது முதல் அனுபவிக்க விரும்பும் அனைத்து வசதிகளும் இதில் அடங்கும்.

கோ அவுட்டோர்ஸ் வழங்கும் இந்த கரவன்களும், மோட்டார் வாகன வீடுகளும் சர்வதேச கீர்த்தி மிக்க வர்த்தக முத்திரை அங்கிகாரம் கொண்டவை. விரிவான சேவை உத்தரவாதத்துடன் அவை கிடைக்கின்றன. இதன் மூலம் உங்களது ஓய்வு நேர பயணத்தில் மிகச்சிறந்த பலனைப் பெற முடியும்.

மோட்டார் வாகன வீடுகள் உங்களுக்கு நிரந்தர முதலீட்டை உறுதி செய்கின்றதோடு, உங்கள் பயணத்துக்கான சுதந்திரத்தை அது அளிக்கின்றது. வீடுகளில் நீங்கள் அனுபவிக்கும் சொகுசு வசதிகளைக் கைவிடாமலே உங்கள் பயணத்தை அனுபவிக்க அது உறுதி அளிக்கின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .