2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

லங்கெம் பெயின்ட்ஸ் 30ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 03 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


சர்வதேச அளவில் பிரபல்யம் பெற்றுள்ள 'ரொபியலக்' வர்த்தக குறியீட்டிலான உற்பத்திகளின் உற்பத்தியாளர்களாகவும் சந்தைப்படுத்துனராகவும் திகழ்கின்ற லங்கெம் பெயின்ட்ஸ் லிமிட்டெட் நிறுவனமானது, தனது எனமெல், இமல்சன் மற்றும் வெதர்கோட் போன்ற வர்ணப்பூச்சு வகைகளுக்கு மார்ச் மாதத்தில் மாபெரும் 30% விலைக் கழிவினை வழங்குவதன் மூலம் தன்னுடைய 30ஆவது ஆண்டு நிறைவை இவ்வருடம் கொண்டாடுகின்றது.
 
லங்கெம் சிலோன் பி.எல்.சி. நிறுவனத்தின் பணிப்பாளர் திரு. றுவான் ரி. வீரசிங்க கூறுகையில், 'இவ்வருடம் 30ஆவது ஆண்டு நிறைவை நாம் கொண்டாடுகின்ற வேளையில், இலங்கையின் முன்னணி வர்ணப்பூச்சு (பெயின்ற்;) உற்பத்தியாளராகவும் முற்றுமுழுதாக உள்நாட்டிலேயே உருவாகிய நிறுவனமாகவும் திகழ்வதையிட்டு நாம் மிகுந்த பெருமிதம் அடைகின்றோம். இந்த தனிச் சிறப்புமிக்க மரபுரிமையை எமது வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். நாடெங்கும் வாழ்கின்ற பல்லாயிரக்கணக்கான இலங்கையர்களின் வாழ்க்கையை நாம் வர்ணமயமானதாக மாற்றிக் கொண்டிருக்கும் இப் பயணம், மிகவும் நீண்டதும்  பரபரப்பான நிகழ்வுகளை கொண்டதும் ஆகும்' என்றார்.

திரு. வீரசிங்க மேலும் கூறுகையில், 'இத்தள்ளுபடியானது இலங்கையின் நிறப்பூச்சு துறையில் வழங்கப்படும் இவ்வகையான சலுகைகளில் முதல் முயற்சியாக அமைவதோடு மட்டுமல்லாமது, வாடிக்கையாளர்களுக்கான வரம் போல வரவேற்கப்பட்டுள்ளது. உயர் வாழ்க்கைச் செலவுக்கு முகம் கொடுக்கும் நுகர்வோர் சிங்கள, தமிழ் புத்தாண்டிற்கு தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில் இச்சலுகை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அத்தோடு எமது இச்சலுகைக்கான நாடளாவிய வரவேற்பு மிகச் சிறப்பாக அமைந்திருந்தது' என்றார்.

இச்சலுகையை அனைத்து ரொபியலக் கலர் ஸ்ரூடியோக்களிலும் மற்றும் நாடு பூராகவுமுள்ள ரொபியலக் முகவர்களிடமும் பெற்றுக் கொள்ளலாம். சலுகை தொடர்பான மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள் 0777004912.

1984 இல் சிங்கப்பூர் பேர்ஜர் இன்டர்நெஷனல் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஒத்துழைப்போடு வர்த்தக ரீதியிலான தொழிற்பாடுகளை ஆரம்பித்ததில் இருந்து 'லங்கெம் கதை' ஆரம்பமாகின்றது. அதிலிருந்து பதினேழு வருடங்களுக்குப் பிறகு அதாவது 2001 ஆம் ஆண்டில்  பேர்ஜர் நிறுவனத்திடமிருந்து பிரிந்து தனிவழியில் பயணிக்க ஆரம்பித்த லங்கெம், தனது சொந்த தொழில்நுட்பத்தின் பக்கபலத்தோடு 100% உள்நாட்டு வர்ணப்பூச்சு உற்பத்தியாளராக உடனடியாகவே முன்னேற்றமடைந்தது. 

இலங்கையின் பெயின்ற் உற்பத்தித் துறையில் ஒரு முன்னோடியான லங்கெம் இன்று இலங்கையின் மிகப் பெரிய உள்நாட்டு வர்ணப்பூச்சு உற்பத்தியாளராகவும் சந்தைப்படுத்துனராகவும் உள்ளது. லங்கெம் நிறுவனத்தின் உயர்ரக உற்பத்தி வகைகளுள் - இமல்சன், எனமெல். வெதர் கோட், விஷேட தோற்றப்பாட்டுக்கான வர்ணப்பூச்சு, பிரைமர்ஸ், துணையுற்பத்திகள், சுவர் தயார்படுத்தல் உற்பத்திகள், நிலப் பூச்சுகள், அன்ரி கொரோசிவ், பசைத்தன்மை சார்ந்தவை, மர உற்பத்திகளை பாதுகாப்பவை, வாகனங்களுக்கான வர்ணப்பூச்சு போன்றவை உள்ளடங்குகின்றன. இதன்மூலம் இலங்கையிலுள்ள வர்ணப்பூச்சு வாடிக்கையாளர்களின் அனைத்து விதமான தேவைகளும் நிவர்த்தி செய்யப்படுகின்றன.

2002ஆம் ஆண்டு ISO 9000 தரச் சான்றிதழை லங்கெம் பெற்றுக் கொண்டதன் மூலம், இலங்கையின் முதலாவது ISO 9000 சான்றுபடுத்தப்பட்ட கம்பனி என்ற பெருமையை பெற்றுக் கொண்டது.

அதேபோல் எக்கல பிரதேசத்தில் அமைந்துள்ள லங்கெம் வர்ணப்பூச்சு தொழிற்சாலையே இலங்கையில் தர முகாமைத்துவ முறைமைக்காக முதன்முதலாக SLS ISO 9001:2008 சான்றிதழைப் பெற்றுக்கொண்ட முதலாவது வர்ணப்பூச்சு உற்பத்தி வசதியாகவும் காணப்படுகின்றது.

அதுமட்டுமன்றி, SLS தர அடையாளத்திற்கு மேலதிகமாக இன்று வரைக்கும் இலங்கையில் சுற்றாடல் முகாமைத்துவ முறைமைக்காக ISO 14001 தரச் சான்றிதழைப் பெற்றுள்ள ஒரேயொரு வர்ணப்பூச்சு உற்பத்தியாளர் என்ற பெருமையையும் தம்வசப்படுத்தியுள்ளது.

2003ஆம் ஆண்டில் லங்கெம் நிறுவனம் தூய்மையாக்கல் உற்பத்தி முறைமைகளை நடைமுறைப்படுத்தத் தொடங்கியது. அதே ஆண்டில் 'ரொபியலக் கலர் ஸ்டூடியோவும்' தனது தொழிற்பாடுகளை ஆரம்பித்தது.

மிகப் புதுமையான 'குழந்தை-நட்புறவு' உற்பத்தியான 'சேப் கோட்' இனை அறிமுகப்படுத்தி வைத்ததன் மூலம் இலங்கையின் வர்ணப்பூச்சு கைத்தொழில் துறையில் முன்னணி செயற்பாட்டாளர் என்ற சாதனையை லங்கெம் ரொபியலக் நிகழ்த்தியது. பொறுப்புணர்வுமிக்க ஒரு கூட்டாண்மை நிறுவனம் என்ற வகையில், சுற்றாடலை மட்டுமன்றி இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினரையும் பாதுகாக்கும் விடயத்தில் தமது நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை அது மீள வலியுறுத்தியிருக்கின்றது.

இந் நிறுவனத்தின் கூட்டாண்மை சமூகப் பொறுப்புணர்வு முன்னெடுப்புகளில் வருடாந்த 'ரொபியலக் வர்ண பூஜா' செயற்றிட்டமும் உள்ளடங்குகின்றது. இந்த செயற்றிட்டத்தின் கீழ் எசல பெரஹராவுக்கு முன்னதாக தலதா மாளிகைக்கு முழுமையாக வர்ணம் பூசப்பட்டு வருகின்றது. இப்போது (2014) தொடர்ச்சியான பத்தாவது வருடமாக முன்னெடுக்கப்படுகின்ற வருடாந்த 'வர்ண பூஜா' ஆனது, பெரேஹரா இடம்பெற முன்னர் புனித தங்க தாது வைக்கப்பட்டுள்ள ஆலயமான தலதா மாளிகையுடன் ஒன்றிணைந்து மேற்கொள்ளப்படுகின்ற பல்வேறுபட்ட சமய அனுஷ்டானங்களில் ஒன்றாக காணப்படுகின்றது.

அதேவேளை, வருடாந்த திருவிழாவை முன்னிட்டு மடு மாதா ஆலயத்திற்கு வர்ணம் பூசியமை லங்கெம் நிறுவனத்திற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும். இலங்கையின் வளம் பொருந்திய கலாசாரம் மற்றும் மரபுரிமைக்கு இவ்வாறான முன்னெடுப்புக்களின் ஊடாக பங்களிப்பு வழங்குவதில் நிறுவனம் கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு அங்கமாகவே இந்த முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

'வர்ணத்துடனான எம்முடைய அனுபவம் மற்றும் இடைத்தொடர்பாடல் ஆகியவற்றினால் எமது வாழ்க்கையும் ஆளுமைப் பண்புகளும் கூட எமக்கு தெரியாமலேயே சீரமைக்கபட்டும் உருவமைக்கப்பட்டும் இருக்கின்றன என்பது எமக்குத் தெரியும். ஆதிகால குகை மனிதர்களின் காலம்தொட்டு இன்றைய தொழில்சார் வடிவமைப்பாளர்கள் வரைக்கும், வர்ணம் என்பது உணர்வு வெளிப்பாடு மற்றும் சுதந்திரத்திற்கான ஒரு ஊடகமாக திகழ்கின்றது. கடந்த முப்பது வருடங்களாக உள்நாட்டு நுகர்வோர்கள் தமது உணர்வை தாமாகவே வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை நாம் வழங்கி வருகின்றோம். அத்துடன், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பல்வகைப்பட்ட எமது உயர்தர வர்ணப்பூச்சுக்களின் மூலம் அவர்களது சுவர்களையும் இடப் பரப்புக்களையும் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றோம். 30ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடுகின்ற இவ்வேளையில், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள எமது பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு நாம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். அதேவேளை, சர்வதேச தராதரங்களுக்கு அமைவான உயர்தர உற்பத்திகளை அவர்களுக்கு எக்காலத்திலும் வழங்குவதற்கும் வாக்குறுதி அளிக்கின்றோம்' என்று திரு. வீரசிங்க கூறி முடித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .