2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

நுவரெலியாவில் நேசன் டிரஸ்ட் வங்கியின் 47ஆவது கிளை

A.P.Mathan   / 2011 நவம்பர் 24 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.தியாகு)

நேசன் டிரஸ்ட் வங்கியின் 47ஆவது கிளை இன்று வியாழக்கிழமை நுவரெலியாவில் திறந்து வைக்கப்பட்டது. நுவரெலியா - கண்டி வீதியில் அமையப்பெற்றுள்ள இப்புதிய கிளையை நுவரெலியா மாநகர சபை முதல்வர் மஹிந்த குமார, முன்னாள் நீதி - சட்ட மறுசீரமைப்பு அமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான வீ.புத்திர சிகாமணி ஆகியோர் இன்று காலை 10.00 மணிக்கு சுப வேளையில் திறந்து வைத்தனர்.

இவ்வைபவத்தில் கலந்து கொண்டவர்களையும் முதலாவது வைப்புப் பணத்தை ரொபின் சீட்ஸ் உரிமையாளர் ரொபின் - வங்கியின் பிரதான நிறைவேற்று அதிகாரி சாலிய ராஜகருணாவிடம் கையளிப்பதையும், நேசன் டிரஸ்ட் வங்கியின் அனுசரணையில் நுவரெலியா பெய்ன்டர் மத்திய கல்லூரிக்கு கணித ஆய்வு கூடத்திற்கு உபகரணங்களுக்கான உத்தியோகபூர்வ கடிதம் கையளிக்கப்படுவதையும் படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .