2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

டயலொக் ஸ்டார் பொயின்ட்ஸ் திட்டத்தில் 5 மில்லியன் ரூபா பரிசுகள்

Super User   / 2010 ஓகஸ்ட் 17 , பி.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

டயலொக்  தொலைபேசி நிறுவனம் புதிய மேம்படுத்தல் நடவடிக்கையாக தனது வாடிக்கையாளர்களுக்கு ஸ்டார் பொயின்ட்ஸ் ஊடாக exSTARvaganza  திட்டத்தின் மூலம் ஐந்து மில்லியன் ரூபா பெறுமதியான பரிசு வழங்கவுள்ளது.

10 ஸ்டார் பொயின்ட்ஸிற்கு மேல் இருக்கும் டயலொக் வாடிக்கையாளர் WIN என டைப் செய்து 141 அனுப்புவதன் மூலம் இப்போட்டிக்குள் இணைத்துக் கொள்ளப்படுவர்.

இதில் ஒவ்வொரு நாளும் தெரிவு செய்யப்படும் அதிர்ஷ்டசாலிகளுக்கு 32' எல்.சீ.டி தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்படும்.

அத்துடன் 20 அதிர்ஷ்டசாலிகள் 1000 ரூபா பெறுமதியான டயலொக் ரீலோட் பெற்றுக்கொள்வர்.

இப்போட்டிக்குள் நுழையும் அனைவரும் செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள குலுக்கள் போட்டியில் உள்வாங்கப்படுவர். இதில் 20 டி.வி.டி. பிளேயர்கள், 20 ஐபோட், 5 மைக்ரோவேவ் அவண், 10 ரைச்குக்கர், பிளன்டர்கள், 20 டயலொக் டி.வி.இணைப்பு மற்றும் 20 யூ.எஸ்.பி.மொடம் என்பன பரிசாக வழங்கப்படும்.

exSTARvaganza மேம்படுத்தல் எதிர்வரும் செப்டம்பர் ஐந்தாம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. அதற்கு முதல் டயலொக் வாடிக்கையாளர்கள் தங்களின் ஸ்டார் பொயின்ட்ஸ்களை செலவழித்து இணைந்துகொள்ள முடியும்.

ஸ்டார் பொயின்ட்ஸ் திட்டம் இலங்கையில் 500 மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள் மற்றும் 1000 மேற்பட்ட வாடிக்கையாளர் நிறுவனங்கள் ஊடாக  நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் ஒரு பாரிய மேம்படுத்தல் நடவடிக்கையாகும். ஒவ்வொரு ஸ்டார் பொயின்ட்ஸும் ஒரு ரூபாய்க்கு சமனாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .