2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

Emerald மற்றும் AOD கைகோர்ப்பு

Editorial   / 2017 ஜூலை 21 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

Emerald International (Pvt) Ltd நிறுவனம், Academy of Design (AOD) கல்வியகத்துடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒத்துழைப்பு இணைவின் அடையாளமாக, புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் அண்மையில் கைச்சாத்திட்டுள்ளது.  

இந்த ஒத்துழைப்பு இணைவு தொடர்பில் Emerald International நிறுவனத்தின் பொது முகாமையாளரான ஃபஸ்னி அமானுல்லா கருத்து வெளியிடுகையில், “எமக்குச் சொந்தமான உற்பத்தி நிலையங்களில் ஆண்களுக்கான வலுவான ஆடையணி வர்த்தகநாமங்களைக் கட்டியெழுப்பும் வர்த்தக முயற்சியில், தொழிற்றுறையின் அதிநவீன உள்ளார்ந்த அம்சங்களை அறிந்துகொள்ளல் மற்றும் உயர் மட்டத்தில் திறனும், திறமையும் கொண்ட வடிவமைப்பாளர்களைக் கொண்டிருத்தல் ஆகியன மிகவும் இன்றியமையாதவையாகக் காணப்படுகின்றன. அந்த வகையில், AOD உடன் இந்த ஒத்துழைப்பு இணைவை ஏற்படுத்தியுள்ளமை தொடர்பில் நாம் மிகுந்த மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைந்துள்ளோம். அங்கு கல்வி பயிலுகின்ற மாணவர்கள் இலங்கையில் வடிவமைப்புத்துறையில் மிகச் சிறந்த வல்லுனர்களாக மாறி வருவதுடன், எமது தொழிற்துறையை எதிர்காலத்தில் வழிநடாத்தவுள்ளவர்களாகவும் திகழ்ந்து வருகின்றனர்” என்று குறிப்பிட்டார்.  

Academy of Design நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ரண்மல் எக்கநாயக்க கருத்து வெளியிடுகையில், “சர்வதேச வடிவமைப்பு நடைமுறைகள், தொழிற்துறை அறிவு, சர்வதேச அனுபவம் மற்றும் உள்நாட்டு பாரம்பரியம் ஆகிய அனைத்தையும் இணைக்கும் வகையில் AOD இன் கல்வி முறைமை மிகவும் தனித்துவமானது. Northumbria உடன் நாம் கொண்டுள்ள வலுவான பங்குடமையானது, AOD வடிவமைப்பாளர்களுக்கு உலகின் எப்பகுதிக்கும் சென்று பணியாற்றுவதற்கான வாய்ப்பினை அளித்துள்ளது. ஆகவே, எமது மாணவர்கள் வடிவமைப்பு அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்தும் நோக்கத்தில் Emerald ஐப் போன்ற மிகவும் பிரபலமான ஆண்களுக்கான ஆடையணி நிறுவனம் ஒன்றுடன் கூட்டாக இணைந்து செயற்பட வேண்டும் என்ற ஆர்வம் மிகவும் இயல்பானதாகும்” என்று குறிப்பிட்டார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .