2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

SDB லக்தரு புலமைப் பரீட்சைகருத்தரங்குகள்

Gavitha   / 2016 ஜூலை 13 , மு.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சணச அபிவிருத்தி வங்கியின் லக்தரு கணக்கின் அனுசரணையுடன், இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் பிள்ளைகளுக்காக, புலமைப் பரிசில் பரீட்சைத் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தொடர் தமிழ் மொழியில் நடாத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தொடரின் 3 கருத்தரங்குகள் அண்மையில் யாழ்ப்பாணம், அநுராதபுரம், மற்றும் ஹொரண ஆகிய இடங்களில் நடைபெற்றது.

அதேவேளை, பிள்ளைகளின் எண்ணங்கள் மற்றும் திறன்களில் அபிவிருத்தியை ஏற்படுத்துவதனை நோக்கி பெற்றோரை அறிவுறுத்தும் நிகழ்வும் அவ்விடத்திலேயே நடாத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

கருத்தரங்கின் போது லக்தரு கணக்கு ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. விஷேட நலன்களைக் கொண்டுதரும் லக்தரு கணக்கானது, கணக்கு மீதிக்கேற்ப பெறுமதியான பரிசில்களை வழங்கும் அதேவேளை, இலவச மருத்துவமனைக் காப்புறுதியையும் கொண்டுள்ளது.

லக்தரு பரிசில்கள் சிறார்கள் மத்தியில் பிரபலமானது. முக்கியமாக உலகத் தகவல்களை கொண்ட உலக வரைபடம் மிக கவர்ச்சிகரமான லக்தரு பரிசொன்றாகும். அதேவேளை, சாதாரண சேமிப்புக் கணக்கை விட லக்தரு கணக்கிற்கு 1% கூடுதலான வட்டியும் வழங்கப்படுகிறது.

பிள்ளையின் ஆரோக்கியத்தை நோக்காகக் கொண்டு வழங்கப்படும் ரூ. 50,000 பெறுமதியான இலவச வைத்தியசாலைக் காப்புறுதி பெற்றோர்கள் மத்தியில் மிகப் பிரபலமானதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .