2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

Sony ஹோம் ஓடியோ சிஸ்டம் அறிமுகம்

Editorial   / 2018 செப்டெம்பர் 20 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கர் (ஸ்ரீ லங்கா) பீஎல்சி மற்றும் Sony International ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஆறு புதிய உயர் வலு கொண்ட ஹோம் ஓடியோ சிஸ்டம்களை அறிமுகம் செய்துள்ளன. இந்நிகழ்வு கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்றது.  

சிங்கர் ஸ்ரீ லங்கா பீஎல்சி நிறுவனத்தின் சார்பில் சிங்கர் குழுமத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரான மொஹான் பண்டிதகே, சிங்கர் குழும பிரதம நிறைவேற்று அதிகாரியான அசோக பீரிஸ், பிரதம தொழிற்பாட்டு அதிகாரியான மகேஷ் விஜேவர்த்தன, சந்தைப்படுத்தல் துறை பணிப்பாளரான குமார் சமரசிங்க மற்றும் வர்த்தகநாம முகாமையாளரான தாரக வர்ணகுலசூரிய ஆகியோரும், Sony International International நிறுவனத்தின் சார்பில் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்துக்கான சந்தைப்படுத்தல் துறை தலைமை அதிகாரியான ஜெரமி ஹெங், Sony International (Singapore) Ltd இலங்கை பிரதிநிதி அலுவலகத்தின் கிளை முகாமையாளரான ஜஸ்டின் வோங் மற்றும் இலங்கைக்கான சந்தைப்படுத்தல் துறை தலைமை அதிகாரியான டில்ஷான் கம்மம்பில ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர்.   

Sony ஓடியோ உற்பத்திகளின் வர்த்தகநாமத் தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கையின் முன்னணி இசைக்கலைஞர்களான பாத்திய மற்றும் சந்தூஷ் ஆகியோரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.  

Shake3-box models வகுப்பைச் சேர்ந்த MHC-M60D, MHC-M40D மற்றும் MHC-M20D மற்றும் அனைத்தும் ஒன்றிணைந்த (all-in-one box style) வகுப்பைச் சேர்ந்த MHC-V81D, MHC-V71D, MHC-V41D மற்றும் MHC - V21D ஆகிய 6 ஹோம் ஓடியோ சிஸ்டம் வகுப்புக்கள் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டதுடன், எந்தவொரு அறையிலும் அதிரும் இசைக்கான உத்தரவாதத்தை அவை வழங்குகின்றன.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--