2021 மார்ச் 06, சனிக்கிழமை

மைக்ரோமெக்ஸ் அறிமுகம் செய்யும் Bolt A59 - Bolt A61

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 02 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையில் தனது தயாரிப்புகளை விஸ்தரிக்கும், உலகில் 10 ஆம் நிலையில் காணப்படும் கையடக்க தொலைபேசி உற்பத்தியாளருமான மைக்ரோமெக்ஸ், தனது மேலும் புதிய அறிமுகங்களான Bolt A59 மற்றும் Bolt A61 ஆகியவற்றை இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த இரு சாதனங்களும் மென்மையான இரும்பு கட்டமைப்பை கொண்டமைந்துள்ளதுடன், பார்ப்பதற்கு கண்கவர் தோற்றத்தை வழங்கும் வகையிலும் அமைந்துள்ளன.

இந்த ஸ்மார்ட்ஃபோன் வகைகள் நீடித்து உழைக்கும் ஆற்றல் மற்றும் நவீன வடிவமைப்பு ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன. 3G வலையமைப்பை கொண்ட இந்த சாதனங்கள் 1GHz புரொசசரையும், 1500 mAh பற்றரியையும் கொண்டுள்ளன. இதன் காரணமாக பாவனையாளர்களுக்கு தமது தொழில் மற்றும் ஓய்வுநேர பொழுது போக்கு அம்சங்களை அனுபவித்து மகிழக்கூடிய வாய்ப்பை வழங்குவதாக அமைந்துள்ளது. இரு கையடக்க தொலைபேசி மாதிரிகளும் 16GB வரை விஸ்தரித்துக் கொள்ளக்கூடிய memoryஐ கொண்டுள்ளன. இதனால் பாவனையாளர்களுக்கு பாடல்கள், படங்கள் மற்றும் இதர கோப்புகளை தரவிறக்கம் செய்து சேமித்து வைக்கக்கூடிய வசதி கிடைக்கிறது.

இந்த புதிய மாதிரிகள் அறிமுகம் தொடர்பில் மைக்ரோமெக்ஸ் ஸ்ரீலங்காவின் இலங்கைக்கான முகாமையாளர் சஞ்சீவ் ஆரியரட்னம் கருத்து தெரிவிக்கையில், 'மைக்ரோமெக்ஸை சேர்ந்த நாம், கண்டுபிடிப்பு மற்றும் புதிய தோற்றம் ஆகியவற்றை இணைத்து பாவனையாளர்களுக்கு வரையறைகளற்ற அனுபவத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளன. இந்த இரு புதிய Bolt A59 - Bolt A61 ஆகிய மாதிரிகளின் அறிமுகத்துடன், இலங்கைச் சந்தையில் தலைமைத்துவ நிலையை உறுதி செய்ய நாம் திட்டமிட்டுள்ளோம்' என்றார்.

இந்த இரு மாதிரிகளும் Instant Messaging செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடிய Hike, இலவசமாக படங்களை பார்வையிட Spuul, net-surfing செய்வதற்காக Opera Mini, உயர்தரம் வாய்ந்த கேம்ஸ்களை விளையாடி மகிழ்வதற்கும், வீடியோ, பாடல்கள் மற்றும் வோல் பேப்பர்கள் பார்வையிடும் வகையில் M!Live போன்ற ஆப்ஸ்களை கொண்டுள்ளன. Bluetooth, Wi-Fi ஆகிய வலையமைப்பு வசதிகளையும் கொண்டுள்ளன.

இவற்றின் விலைகள் முறையே Bolt A59 - ரூ. 8490 மற்றும் Bolt A61 - ரூ. 9990 ஆக அமைந்துள்ளன. நாட்டின் சகல முன்னணி விற்பனை நிலையங்களிலிருந்தும் 2014 மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இந்த மாதிரிகளை வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்யலாம். மேலதிக விபரங்களை பெற்றுக் கொள்ள www.micromaxinfo.com/sl எனும் இணையத்தளத்தை பார்வையிடவும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .