
சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் பினான்ஸ் பிஎல்சி (CDB) நிறுவனமானது தமது நிதி தொழில்நுட்பத் தளத்தை பன்முக பணம், கிளைகள் மற்றும் வங்கியியல் ஆற்றல்களை கொண்டதாக மாற்றியமைக்கும் நோக்கில் உலகளாவிய முன்னணி நிதியியல் தொழில்நுட்ப நிறுவனமான Polaris Software (POLS.BO) மற்றும் முன்னணி தகவல் தொழில்நுட்ப வழங்குநரும், லண்டன் பங்குச்சந்தைக் குழுமத்தின் பங்காளருமான Millennium IT நிறுவனத்துடன் இணைந்து மைய வங்கியியல் தீர்வுகளை செயல்முறைப்படுத்தவுள்ளது.
இந்த நன்கு அபிவிருத்தி செய்யப்பட்ட மென்பொருளானது CDB நிறுவனத்தின் அன்றாட நடவடிக்கைகளின் செயற்திறன், செயல்பாடு, பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை போன்றவற்றை அதிகரித்து வாடிக்கையாளர்களுக்கு உயர்மட்ட சேவையை அனுபவிக்க வழி வகுக்கிறது. இவ் Intellect மென்பொருளானது பல்வேறு முயற்சிகளுக்கு சீரான ஒருங்கிணைப்பினை ஏற்படுத்துவதுடன், பல்வேறு நடவடிக்கைகள் மூலம் நட்டஅச்ச கட்டுப்பாட்டை உறுதிப்படுத்திய தளத்தை உருவாக்குகிறது.
Intellect™ உற்பத்தி தொகுதியானது அடிப்படை மைய தொகுதிகள், பொது பேரேடு, செயற்பாட்டு கணக்கியல், வைப்பு, சேமிப்பு, கடன் மற்றும் முற்கொடுப்பனவு, பாதுகாப்பு சேவைத்தொகுதி மற்றும் கருமபீட செயற்பாடுகள், தீர்வுச் செயற்பாடுகள், பணம் அனுப்பல், மிடில்வேர் ஒருங்கிணைப்பு, MIS மற்றும் ஆய்வு, ஒற்றை உள்நுழைவுடனான கணக்காய்வு சோதனை மற்றும் அணுகல் கட்டுப்பாடு போன்ற பிரத்தியேகமான தொகுதிகள் போன்ற பரந்தளவிலான வங்கியியல் நடவடிக்கைகளுக்கு ஆதரவினை வழங்குகிறது.
CDB நிறுவனத்தின் IT பிரிவின் பிரதி பொது முகாமையாளர் இம்டாட் நகுய்ப் கருத்து தெரிவிக்கையில், 'Polaris Intellect நிறுவனத்துடனான கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட பங்காண்மை மூலம் CDB இன் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய வகையிலான தொழில்நுட்பக் கட்டமைப்பினை உருவாக்கியுள்ளது. மேலும் Sri Lanka Interbank Payment System (SLIPS) அங்கத்தவராக பங்கேற்று எமது துரிதமான புவியியல் இருப்பு விரிவாக்கல்கள் மூலம் நாட்டினுள் ஒட்டுமொத்த வங்கியியல் கட்டமைப்பினையும் இணைக்க முடிந்துள்ளது. மேலும் இதன் மூலம் CDB சர்வதேச வீசா கடனட்டை காப்புறுதியுடன் நாட்டின் மிகப்பெரிய பிரத்தியேக ATM வலையமைப்புடன் தொடர்பினை மேற்கொள்ள உதவியாக உள்ளது' என்றார்.
CDB நிறுவனமானது Intellect CBS இனை உச்ச செயற்பாட்டு முறைகளை கொண்ட நவீன தொழில்நுட்பத்தின் காரணமாகவே தேர்ந்தெடுத்துள்ளது. வர்த்தக செயல்பாட்டு மாற்றங்களை உள்ளடக்கிய தற்போதைய மற்றும் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையிலான கட்டமைப்பை கொண்டுள்ளது. நிகழ்நேர அணுகல் முறை மற்றும் கிடைக்கும் தன்மை மற்றும் அதன் இணைய வசதி போன்றன CDB இன் வளர்ச்சி மற்றும் விரிவாக்கல் திட்டங்கள் குறித்து உணர வழிவகுத்துள்ளது.
இச் செயற்படுத்தல் குறித்து கருத்து தெரிவித்த Polaris Software (IMEA) நிறுவனத்தின் பங்காளரும், பூகோள தலைவருமான கே.ஸ்ரீனிவாசன், 'இலங்கையில் எமது முதல் அமுலாக்கல் எனும் வகையில், CDB நிறுவனம் பொலாரிஸ் நிறுவனத்திற்கு சாத்தியமான சந்தையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் 9 சிறப்பு வங்கிகள், 47 பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனங்கள் மற்றும் 24 அங்கீகாரம் பெற்ற வர்த்தக வங்கிகள் காணப்படுவதுடன், அவை நிறுவனங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் தேவை மற்றும் விநியோகம் தொடர்பில் பாரிய இடைவெளியை ஏற்படுத்துகிறது. இவ் வாய்ப்புகள் குறித்து பொலாரிஸ் நிறுவனம் நன்கு ஆராய்ந்து நேர்மறையான மனப்பாங்கினை கொண்டுள்ளது' என்றார்.
Millennium IT நிறுவனத்தின் நிர்வாக துணைத்தலைவர் ஃபய்க் ஃபாய்ஸ் (Faiq Faaiz) கருத்து தெரிவிக்கையில், 'பொலாரிஸ் நிறுவனத்தின் உள்நாட்டு வர்த்தக பங்காளர் எனும் ரீதியில், CDB இன் வர்த்தக விரிவாக்கல் திட்டங்களின் தொழில்நுட்ப வழங்கல் தொடர்பில் முக்கிய பங்களிப்பினை செலுத்தும் Intellect™ அமுலாக்கலில் முக்கிய பங்காற்றுவதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். மைய வங்கியியல் தொழில்நுட்பம் தொடர்பான அனுபவம் மற்றும் உள்நாட்டு வங்கி மற்றும் நிதி சேவைகள் தொடர்பான நிபுணத்துவம் காரணமாக CDB நிறுவனத்தில் சீரான செயல்முறைப்படுத்தல் தீர்வுகளை வழங்க இயலும் என நாம் நம்புகிறோம்' என தெரிவித்தார்.