Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 15 , மு.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
“Effies 2010" விருதுகள் வழங்கும் நிகழ்வில் எடிசலாட் நிறுவனம் அனைத்து பிரிவுகளிலும் விருதுகளை பெற்றுக்கொண்டுள்ளது. தொலைத்தொடர்புகள் பிரிவில் 3 விருதுகளையும் வென்றுள்ளது. அனைவருக்கும் பிளக்பெரி, பிக்பாங் தியறி மற்றும் இரு நண்பர்கள் செயற்திட்டங்களுக்கு 2 வெள்ளி விருதுகள் மற்றும் 1 வெண்கல விருதும் அமைந்துள்ளது.
எடிசலாட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி துமிந்திர ரத்நாயக்க இந்த விருதுகள் குறித்து தெரிவிக்கையில், இலங்கையில் எடிசலாட் செயற்பாடுகளை அறிமுகம் செய்யும்போது நாம் பெரும் சவாலை எதிர்நோக்கியிருந்தோம். சர்வதேச ரீதியில் மிகவும் புகழ்பெற்ற நாமமாக எடிசலாட் அமைந்திருந்தாலும், உள்ளுர் கையடக்க தொலைபேசி சேவை வழங்குனர் சந்தையில் நிலவிய போட்டித்தன்மை எமக்கு பெரும் சவாலாக அமைந்திருந்தது. இவற்றை கருத்தில் கொண்டு நாம் திட்டமிட்டு சிறந்த தொடர்பாடல் திட்டத்தை நாம் முன்னெடுத்திருந்தோம். இதை பறைசாற்றும் வகையில் எமக்கு கிடைத்த விருதுகள் திகழ்கின்றன என்றார்.
'அனைவருக்கும் பிளக்பெரி' திட்டம், வெள்ளி விருதை வென்றிருந்தது. வர்த்தக நிலைய பாவனைக்கு மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரிகளின் தொடர்பாடல்களுக்கு மட்டும் என மட்டுப்படுத்தப்பட்டிருந்த பிளக்பெரி தொலைபேசியின் பாவனையை அனைத்து தரப்பினருக்கும் ஏற்புடையது என வாடிக்கையாளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இதன் மூலம் பிளக்பெரி உயர் அதிகாரிகள் முதல் இளையவர்களை வரை அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக் கூடியது எனும் வரவேற்றை பெற்றது.
'பிக் பாங் தியறி' திட்டத்தின் மூலம், முன்னர் டீகோ வர்த்தக நாமத்தில் திகழ்ந்த கையடக்க தொலைபேசி சேவைகளை எடிசலாட் நாமத்தின் கீழ் கொண்டு வர முன்னெடுக்கப்பட்டிருந்த திட்டமாகும். சிறந்த விளம்பர நடவடிக்கைகளின் மூலமும் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளின் மூலமும் இதை குறுகிய காலப்பகுதியினுள் வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்தது. இதற்காகவே விருது வழங்கல் நிகழ்வில் வெள்ளி விருதை இந்;த திட்டம் வென்றிருந்தது. தொடர்பாடல் செயற்திட்டமானது மொத்தம் 5 புள்ளிகளில் 4.7 புள்ளிகளை பெற்றிருந்தது.
எடிசலாட் நிறுவனத்தின் அனைத்து தொடர்பாடல் செயற்திட்டம் குறித்து நிறுவனத்தின் சிரேஷ்ட சந்தைப்படுத்தல் குறியீட்டு முகாமையாளர் சுன்ஜீவ பெரேரா கருத்து தெரிவிக்கையில், 'மூன்று வருடங்களுக்குள் இரு தடவைகள் பெயர் மாற்றத்துக்கு எமது நிறுவனம் உள்ளானது. இந்நிலையில், எடிசலாட் தனது வர்த்தக குறியீட்டை, சர்வதேச, நம்பகமான, நிலையான மற்றும் உயர் தொழில்நுட்ப ரீதியான ஒன்றாக வாடிக்கையாளர் மத்தியில் நிலைநிறுத்த பெரும் சவாலை எதிர்நோக்கியிருந்தது. இதன்போது இலங்கையின் முன்னணி விளம்பர தொடர்பாடல் நிறுவனங்கள் மற்றும் ஆய்வு நிறுவனங்களின் ஆதரவுடன் குறுகிய காலப்பகுதியில் மக்கள் மனதில் இடம்பிடிக்க முடிந்தது. எமக்கு தொடர்ச்சியாக தமது ஆதரவு வழங்கும் எமது விளம்பர தொடர்பாடல் நிறுவனங்களின் சேவைகள் பாராட்டுதலுக்குரியது' என்றார்.
'இரு நண்பர்கள்' திட்டத்துக்கு எடிசலாட், வெண்கல விருதை வென்றுள்ளது. இந்த திட்டத்தின் அடிப்படையில் வாடிக்கையாளர் ஒருவர் மேற்கொள்ளும் ஒரு மாதத்தின் மொத்த அழைப்புகளுக்கான நிமிடத்தின் அளவு கணக்கிடப்பட்டு அடுத்த மாதம் விரும்பிய இரு இலக்கங்களுக்கு இலவசமாக அழைப்புகளை ஏற்படுத்த கூடிய சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த சேவையை எடிசலாட் முதன் முதலில் அறிமுகம் செய்திருந்ததுடன், ஏனைய சேவை வழங்கும் நிறுவனங்கள் இது போன்றதொரு சேவையை வழங்கியிராமையும் குறிப்பிடத்தக்கது.
Effies விருதுகள் வழங்கும் நிகழ்வில் விருதுகளை வென்று பெருமையை தேடியுள்ள எடிசலாட், தொடர்ந்து தமக்கு ஆதரவை வழங்கி வரும் வாடிக்கையாளர்களுக்கு அடுத்த தலைமுறைக்கான தொலைபேசி தீர்வுகளை வழங்க தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், நீண்ட கால நோக்குடன் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கவும் முன்வந்துள்ளது.
2 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago