2021 மார்ச் 08, திங்கட்கிழமை

இலங்கையில் மலேசியாவின் EXIM வங்கி

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 16 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்நாட்டு அதிகாரிகளுடன் முன்னெடுத்திருந்த நேர்த்தியான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து மலேசியாவின் EXIM வங்கி தனது செயற்பாடுகளை விரைவில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தது.
 
இந்த சந்திப்பின் போது இலங்கையில் நிலவும் சந்தை சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு இலங்கையில் EXIM வங்கியின் செயற்பாடுகளை விஸ்தரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டனர்.
 
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி என்பது 7 வீதத்துக்கும் அதிகமான நிலையில் காணப்படுவதுடன், அண்மைக்காலமாக முன்னெடுக்கப்பட்டிருந்த கொள்கை பின்பற்றல்களின் காரணமாக நாட்டின் பொருளாதாரம் உறுதியான நிலையில் காணப்படுகிறது என குறிப்பிட்ட EXIM வங்கியின் பிரதிநிதிகள், தெற்காசிய பிராந்தியத்தில் காணப்படும் வியாபார சூழ்நிலைகளுக்கமைய நாட்டின் வளர்ச்சி என்பது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது என்றனர். OECD அபிவிருத்தி நிலையத்தின் மத்திய கால எதிர்வுகூறல் கட்டமைப்பு வரைவுக்கமைய (MPF-2014), அசல் மொத்த தேசிய உற்பத்தி வளர்ச்சி என்பது வளர்ந்து வரும் ஆசிய பொருளாதாரங்களில் 2014 – 2018 காலப்பகுதியில் உயர்ந்த மட்டத்தில் காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இதற்கமைவாக, மத்திய முதல் நீண்ட கால அடிப்படையில் இலங்கையின் ஐந்தொகை மீதி என்பது, கிழக்கு ஆசியா மற்றும் ஆபிரிக்கா மற்றும் மத்தியகிழக்கு வியாபார தொகுதிகளை போன்று, உத்வேகமான மக்களின் பங்களிப்பு, கொள்கை நிலைப்பாடு மற்றும் சந்தையின் அடைவு தன்மை போன்றவற்றின் பங்களிப்புடன் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டிருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .