Menaka Mookandi / 2010 நவம்பர் 18 , மு.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

(ஜதுசன்)
களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் ஹற்றன் நஷனல் வங்கியின் 201ஆவது கிளை இன்று காலை வைபவ ரீதியாக வங்கிகளின் முகாமைத்துவ பணிப்பாளர் ராஜேந்திரா தியாகராஜாவினால் திறந்து வைக்கப்பட்டது.
வங்கியின் முகாமையாளராக கே.வடிவழகன் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளதுடன், அதி நவீன வசதி கொண்ட வங்கிக்கிளையே இது என அவர் தெரிவிக்கின்றார். படுவான்கரை, எழுவான்கரை பிரதேச மக்களுக்கு சிறந்த சேவையை இக்கிளையூடாக வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
தனியாரின் அதி நவீன வசதி கொண்ட கட்டிடத்தில் இக்கிளை இயங்குவதுடன், நிபுணத்துவம் கொண்ட உத்தியோகத்தர்களுடன் இயங்கும் இக்கிளை மூலம் பிரதேச மக்கள் சிறந்த சேவையை பெறமுடியும் என்பதே எதிர்பார்ப்பாகும்.
39 minute ago
43 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
43 minute ago
48 minute ago
1 hours ago