Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 ஒக்டோபர் 19 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூஸிலாந்தில் நடைபெற்று வருகின்ற உலகக்கிண்ண றகர் போட்டிகள் தொடர்பான தகவல்களை விரைவாகவும் துரிதமாகவும் Hutch பாவனையாளர்கள் VAS சேவையூடாக பெற்றுக் கொள்ளலாம்.
உலகக்கிண்ண றகர் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் சர்வதேச றகர் சம்மேளனத்தின் முதற்தர றகர் மத்;தியஸ்தரான டில்ரோய் பெர்ணான்டோவின் வர்ணனையுடனான போட்டியை செவிமடுப்பதற்கு Hutch555 சேவையை பாவனையாளர்கள் பயன்படுத்தலாம்.
நாளாந்த போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னரும், போட்டிகளின் இடைநடுவிலும் பல்வேறு வகையான தகவல்களை அவர் வழங்கவுள்ளார். போட்டி நிறைவடைந்த பின்னர் போட்டியின் தோல்விக்கான காரணங்கள், வெற்றிக்;கு வழிவகுத்த முக்கிய தருணங்கள் உள்ளிட்டவற்றை விமர்சன ரீதியாக வழங்கவுள்ளமை இந்த சேவையின் முக்கியமான அம்சமாகும்.
உலகக்கிண்ண றகர் போட்டிகளின் கால அட்டவணை, சிறந்த வீரர்கள், Score Updates, கடந்தகால சாதனைகள், இம்முறை நிகழ்த்தப்பட்ட சாதனைகள் மற்றும் விறுவிறுப்பான விடயங்களை செவிமடுக்க Hutch555 மூலம் சந்தர்ப்பம் கிடைத்துள்;ளது.
இதற்கு முன்னரும் HUTCH நிறுவனம் நல்லூர் திருவிழா, கதிர்காம திருவிழா, எசல பெரஹெர, ரமழான் பண்டிகை போன்ற காலகட்டத்தில் Vas packயை அறிமுகப்படுத்தியிருந்ததுடன் இது பாவனையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
நல்லூர் உதயகாலபூசை, அர்த்தஜாம பூசை, நல்லூர் வருடாந்த இரதோற்சவம் தொடர்பான நேர அட்டவணையை பக்தர்கள் பெறக்கூடிய வகையில் Vas pack அமைந்திருந்ததாகவும் இதுதவிர ரமழான் நோன்பிருக்கும் நேரம், நோன்பு திறக்கும் நேரம் ஆகியவற்றையும் பாவனையாளர்களுக்கு அறிவித்தமையால் அது நன்மை பயக்கும் வகையில் இருந்ததாக Hutch நிறுவனத்தின் விசேட சேவைகள் மற்றும் ரோமிங் பிரிவுக்கான தலைவர் அருள்வாஸ் தெரிவித்தார்.
Vas pack அறிமுகப்படுத்தப்பட்டதன் முக்கிய நோக்கம் Hutch பாவனையாளர்களுக்கு இத்திட்டம் சென்றடைந்து அதனால் அவர்கள் பூரண பயனை பெற வேண்டும் என்ற எண்ணத்திலேயாகும் என்றும் அவர் கூறினார்.
புகைப்படத்திற்கான விளக்கம்
சர்வதேச றகர் சம்மேளனத்தின் முதற்தர றகர் மத்தியஸ்தரும் வர்ணனையாளருமான டில்ரோய் பெர்ணான்டோ HUTCH 555 சேவை மூலம் உலகக்கிண்ண றகர் போட்டிகளின் தகவல்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். அவருக்கு HUTCH நிறுவனத்தின் விசேட சேவைகள் மற்றும் ரோமிங் பிரிவுக்கான தலைவர் அருள்வாஸ் நினைவுச் சின்னமொன்றை கையளிக்கும்போது எடுக்கப்பட்ட படம்.
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago