2025 ஜூலை 02, புதன்கிழமை

iPhone X அலைபேசியை அபான்ஸ் காட்சியறைகளில் மட்டும் ஏன் வாங்க வேண்டும்?

Editorial   / 2018 செப்டெம்பர் 13 , பி.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

Apple உற்பத்திகளின் உயர்தரம் தொடர்பாக இலங்கையர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை பாதுகாத்து, வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையை உறுதிசெய்யும் வகையில் நவீன iPhone X அலைபேசிகளை அபான்ஸ் மட்டுமே வழங்கி வருகிறது.

iPhone X அலைபேசியில் ஹோம் பட்டன் இல்லை. அதேநேரத்தில் Face ID ஊடாக அலைபேசியை Unlock செய்து கொள்ள முடியும் என்பதால் உரிமையாளரின் அடையாளம் மேன்மையாக உறுதிசெய்யப்படுகிறது. இதிலுள்ள அதிநவீன கமரா உங்கள் முக அமைப்பை மற்றும் அடையாளத்தை மிகவும் நுட்பமான முறையில் படமெடுத்து அதன் வாயிலாக அலைபேசிக்குள் நுழைவதற்கான வசதியை வழங்குவதால், உங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு மேன்மையான முறையில் பாதுகாக்கப்படுகிறது. 

இதனால் Apple Pay ஊடாக அல்லது வேறு Apps ஊடாக கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் போது, பாதுகாப்பான முறையில் Unlock செய்யக்கூடிய வசதி வழங்கப்படுவதால், பாதுகாப்பு சிறப்பாக உறுதிசெய்யப்பட்டு மிகவும் எளிமையாக நமக்கு தேவையான பணிகளை செய்துகொள்ள முடியும். 

அதேபோல் உங்கள் வெளித்தோற்றத்தில், அழகுக்கலையில் அல்லது சிகையலங்காரத்தில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தால் அதையும் இது மிகச்சிறப்பாக உள்வாங்கிக் கொள்ளும். இதன் சிறப்பம்சம் உள்ளரங்கில் அல்லது வெளிப்புறத்தில் அதேபோல் இருளில் மிகவும் சிறப்பாக செயல்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .