2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

Lux Etoiles ஹோட்டலுக்கு 3 நட்சத்திர அக்கிகாரம்

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 14 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ்ப்பாணத்தில் 8 அறைகளுடன் தரமான முறையில் இயங்கிக்கொண்டிருக்கும் Lux Etoiles  ஹோட்டலின் உரிமையாளர் வெற்றிவேலினால் சமர்ப்பிக்கப்பட்ட புதிய ஹோட்டலின் வரைபடத்திற்கு 3 நட்சத்திர அந்தஸ்தினை அதிகாரிகள் வழங்கியிருக்கிறார்கள்.

கடந்த 7ஆம் திகதி அனுப்பிவைக்கப்பட்டுள்ள அனுமதி கடித்திலேயே இந்த 3 நட்சத்திர அந்தஸ்தினை அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்த அந்தஸ்து தொடர்பாக உரிமையாளர் வெற்றிவேல் எமக்குக் குறிப்பிடுகையில்...

'யாழ்ப்பாணத்தில் முதன்முதலாக 3 நட்சத்திர அங்கிகாரத்தினை எமது Lux Etoiles ஹோட்டலுக்கு வழங்கியிருக்கிறார்கள். நல்லூரில் செட்டி லேனில் அமைந்திருக்கும் எமது தற்போதைய Lux Etoiles ஹோட்டல் அப்படியே இயங்கும். அதனையும் விருத்தி செய்து இன்னும் 16 அறைகளை கட்டிக்கொண்டிருக்கிறோம். இதேவேளை இதே ஹோட்டலுக்கு அருகாமையில் செட்டி வீதியில் Lux Etoiles 3 நட்சத்திர ஹோட்டல் வேலைகளை ஜனவரியில் ஆரம்பிக்கவிருக்கிறோம். இது யாழ். மண்ணுக்கு கிடைத்திருக்கும் பெருமை. முதன்முதலாக எமக்கு 3 நட்சத்திர ஹோட்டலுக்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றமை சிறப்பானதாகும்...' என்று குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .