Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 டிசெம்பர் 08 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
"ஃபுல் ஒப்ஷன் வெஹிகிள் எமர்ஜன்சி காப்புறுதி" தொடர்பில் ஜனசக்தி காப்புறுதியின் முகாமைத்துவ பணிப்பாளர் பிரகாஷ் ஷாஃப்டருடனான நேர்காணல் :-
வாகன உரிமையாளர்களுக்கு மன நிம்மதியை வழங்குவதற்கே இவ்வாறான சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. மக்கள் வீதியில் உதவியின்றி தவிக்கும் நிலை உண்டு.
அவ்வாறான சமயங்களின் போது நிபுணத்துவமிக்க நம்பிகையான உதவி தேவைப்படும் சந்தர்ப்பங்கள் உள்ளன. அந்த சந்தர்ப்பங்களை நாம் சிறந்த முறையில் பயன்படுத்தி வாகன உரிமையாளர்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்கிறோம்.
சகலவிதமான சேவைகளையும் வழங்குகிறோம். ஊதாரணமாக வாகனத்தின் டயர் பஞ்சராகியதாயின் நாம் வந்து அதனை மாற்றுவோம். எரிபொருள் முடிந்துவிட்டால், எமது விரைவான பழுதுபார்க்கும் அணியினர் பெட்ரோல் ஃ டீசலை வழங்குவார்கள்.
மேலதிகமாக, வாகனத்தை ஜம்ப் ஸ்டார்ட் செய்தல், ஃபேன் பெல்ட் மாற்றுதல், மின் பிரச்சினைகளை கண்டறிதல், எஞ்சின் மற்றும் பிரேக் எண்ணெய் நிரப்புதல் போன்ற பல சேவைகள் வழங்கப்படுகின்றன.
அத்துடன், வாகனத்தில் சாவியை வைத்து மூடி விட்டு பூட்டை உடைக்க அல்லது கண்ணாடியை உடைக்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும் கவலைப்பட வேண்டியதில்லை. நாம் பூட்டு திறப்பவரை ஏற்பாடு செய்து பயணத்தை தொடர உதவுவோம்.
இதற்கு ஒரு படி மேலே சென்று, வேறொரு வாகனத்தையும் தேவையேற்படின் வழங்குவோம். அல்லது வாகன உரிமையாளரின் நண்பருக்கோ அல்லது குடும்ப உறுப்பினருக்கோ அறிவித்து வாகனம் பழுதடைந்தமை தொடர்பில் அவர்களுக்கு தெரியப்படுத்துவோம். வாகனத்தை நகர்த்த முடியாத சந்தர்ப்பத்தில் அருகிலுள்ள கராஜூக்கு இழுத்துச் செல்லும் சேவையை கூட வழங்குவோம்.
எமது பரந்த சேவைகள் முழு நாட்டிலும் 24 மணிநேரமும் வழங்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில், கொழும்பில் அல்லது தென் பிராந்தியத்தில் இருந்தாலும் நாம் அழைக்கும் தொலைவிலேயே உள்ளோம்.
எமது விரைவான பழுதுபார்த்தல் அணியானது 120 தகைமையுள்ள மற்றும் அனுபவமுள்ள தொழில்நுட்பவியலாளர்களைக் கொண்டுள்ளது. வேன்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் டிரக்குகளைக் கொண்டுள்ள நாம் தேவையின் போது மிகவிரைவில் சேவையை வழங்க தயாராக உள்ளோம்.
வாடிக்கையாளர்களின் தேவைகளை சந்திப்பதற்காக மிகவும் கவனமாக தெரிவு செய்யப்பட்ட 130 கராஜ்களுடன் நாம் இணைந்துள்ளோம். இந்த கராஜ் வலையமைப்பானது எமது மற்றும் வாகன உரிமையாளர்களின் செயற்பாடுகளை இலகுவாக்கியுள்ளது.
சகல சேவைகளும் தொழிலாளர் கூலியின்றி இலவசமாக வழங்கப்படுகின்றன. எந்தவிதமான பழுதடைவாயினும் வாகனம் மிகவும் கவனமாக கையாளப்படுவதை எமது அனுபவமிக்க விரைவான பழுதுபார்த்தல் அணி உறுதி செய்யும்.
நிச்சயமாக இல்லை. வயது, பால், சமூக அந்தஸ்து அல்லது காப்புறுதியாளரை கருத்திற் கொள்ளாது சகலரும் வாகன பழுதடைதலை சந்திக்கலாம். இதனைக் கருத்திற் கொண்டு ஜனசக்தி வாடிக்கையாளர்கள் அல்லாதோருக்கும் இந்த சேவையை வழங்க தீர்மானித்துள்ளோம்.
நீங்கள் எங்கு காப்புறுதி கொண்டுள்ளீர்கள் என்பதைக் கருத்திற் கொள்ளாது ஃபுல் ஒப்ஷன் வெஹிகிள் எமர்ஜன்சி காப்புறுதியை யாரும், எந்நேரத்திலும், எவ்விடத்திலும் கொள்வனவு செய்யலாம்.
தற்போதுள்ள ஜனசக்தி ஃபுல் ஒப்ஷனின் பரந்த காப்புறுதியைக் கொண்டுள்ள வாடிக்கையாளர்கள் இதன் நன்மைகளை ஆண்டுக்கு ரூ. 750/க்கு அனுபவிக்கலாம். ஜனசக்தியின் மூன்றாவது நபர் காப்புறுதியாளர்கள் இதனை ரூ. 2500/க்கு பெற்றுக் கொள்ளலாம். இதன் போது, மூன்றாம் நபர் காப்புறுதி இலவசமாக வழங்கப்படும். ஜனசக்தி வாடிக்கையாளர்கள் அல்லாதவர்களும் இந்த காப்புறுதியை ரூ. 2500/க்கு சகல நன்மைகளுடனும் பெற்றுக் கொள்ளலாம்.
எமது 130 உறுதியான கராஜ் வலையமைப்பையும் நாடுமுழுவதும் பரந்துள்ள எமது 100க்கும் அதிகமான கிளை வலையமைப்பையும் தொடர்ந்து விஸ்தரிப்போம்.
உண்மையான வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதற்காக உதிரிப்பாக முகவர்கள் மற்றும் சேவை நிலையங்களுடனும் நாம் கைகோர்க்க உள்ளோம்.
வாகன உரிமையாளர்களின் தேவையின் போது, நாட்டின் எவ்விடத்திலும் சென்று, அவர்களுக்கு மன நிம்மதியை வழங்குவதே இந்த காப்புறுதியின் பிரதான இலக்காகும்.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago