2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

வவுனியாவில் "பாரதி ஏயார்டெல் லங்கா"வின் கைத்தொலைபேசி விற்பனை நிலையம்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 27 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

"பாரதி ஏயார்டெல் லங்கா பிறைவேட் லிமிட்டெட் கையடக்க தொலைபேசி நிறுவனத்தின்" விற்பனை நிலையம் இன்று புதன்கிழமை வவுனியா கடை வீதியில் இன்று காலை வைபவரீதியாக  திறந்துவைக்கப்பட்டது.

வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார, மாவட்ட அரச அதிபர் திருமதி பி.எம்.எஸ்.சாள்ஸ், நகர சபைத் தலைவர் ஜி.நாதன் உள்ளிட்ட பலர் இந்த வைபவத்தில் கலந்து சிறப்பித்தனர்.

"இலங்கையில் 1.5 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்த நிறுவனம் வடக்கே வவுனியா, யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மாவட்டங்களில் தமது வலையமைப்பினை விஸ்தரித்துள்ளதாக" ஏயார்டெல் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

"தொழில்நுட்பத்துறையில் பாரிய முன்னேற்றங்கள் காணப்பட்டுவரும் இத்தருணத்தில் ஏயார்டெல்லின் வளர்ச்சி மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்" என இந்த வைபவத்தில் உரையாற்றிய மாவட்ட அரச அதிபர் குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .