2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

“SLIM Award 2010”இல் அதிக விருதுகளை பெற்ற ஜனசக்தி

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 26 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கடந்த வார இறுதியில் நடைபெற்ற மிகவும் புகழ்பெற்ற “SLIM Award 2010” நிகழ்வில் ஜனசக்தி காப்புறுதி பி.எல்.சி. நிறுவனம் மூன்று கௌரவ விருதுகளைப்  பெற்றுக்கொண்டது. இதன்மூலம், இவ்விருது வழங்கல் நிகழ்வில் சேவைப் பிரிவின் கீழ் அதிக எண்ணிக்கையான விருதுகளை வென்ற இலங்கையின் ஒரேயொரு காப்புறுதி நிறுவனமாக ஜனசக்தி திகழ்கின்றது.

இதன்போது ஜனசக்தி காப்புறுதி நிறுவனமானது
“'Turnaround Brand of the Year”  என்ற பிரிவில் வெள்ளி விருதினையும்  Local Brand of the Year என்ற பிரிவிலும் Service Brand of the Year” பிரிவிலும் தலா ஒவ்வொரு வெண்கல விருதுகளையும் பெற்றுக் கொண்டது.

ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் துறை தலைவர் படி வீரகேசர கூறுகையில், "வர்த்தக குறியீட்டினை கட்டியெழுப்புதல் மற்றும் அதனை முகாமை செய்தல் என்பவற்றில் ஜனசக்தி காப்புறுதி நிறுவனம் எடுத்துக் கொண்ட பிரயத்தனத்திற்கு கிடைத்த தன்னிகரற்ற அங்கீகாரமே இது'" என்று தெரிவித்தார். 

"இவ்வருடத்தில் மேற்படி விருது வழங்கல் நிகழ்வில் அதிகமான விருதுகளை வென்ற ஒரேயொரு காப்புறுதிக் கம்பனியாக திகழ்வதையிட்டு நாம் பெருமையடைகின்றோம். எமது வர்த்தக குறியீட்டினை ஸ்திரநிலையில் வைத்திருப்பதற்கான முயற்சி, சேவையின் நிகரற்ற தரம் மற்றும் வர்த்தக குறியீட்டினை கட்டியெழுப்புவதற்காக தொடர்ச்சியாக முதலீடுகளை மேற்கொள்வதன் மூலம் சிறந்த பெறுமதியை உருவாக்குதல் போன்றவற்றினால் இந்த விருதுக்காக நாம் தகைமை பெற்றோம்.

வர்த்தக குறியீட்டு மேம்பாட்டுக்கான வாடிக்கையாளரை மையப்படுத்திய எமது அணுகுமுறை மற்றும் அதனோடு தொடர்புபட்ட முன்னெடுப்புகளை பாராட்டும் விதத்தில் தேசிய மட்டத்தில் கிடைத்துள்ள இந்த அங்கீகாரத்தின் காரணமாக, எமது ஜனசக்தி அணியினர் மகிழ்ச்சியடைவதுடன் பெரிதும் கௌரவம் பெறுகின்றனர்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

"நாட்டிற்கான சிறந்த சேவைகளின் தரம் மற்றும் காப்புறுதித் துறையில் முதல்முதலாக பல திட்டங்களை அறிமுகப்படுத்தியமை போன்றவற்றுக்காக ஜனசக்தி காப்புறுதி நிறுவனமானது தன்னளவில் ஆத்ம திருப்தி கொள்கின்றது. இலங்கையின் காப்புறுதித் துறையில் கடந்த மாதம் இன்னுமொரு புரட்சியை நாம் உருவாக்கினோம்.

இலங்கை வரலாற்றில் முதன்முதலாவதான 'இடைநடுவில் பழுதடையும் வாகனங்களுக்கான 24 மணிநேர சேவை" வழங்கும் திட்டமான "ஃபுல் ஒப்சன் வெஹிகிள் எமேர்ஜன்சி பொலிஸி'" ஐ அறிமுகப்படுத்தி வைத்ததன் மூலமாகவே இப்புரட்சி ஏற்படுத்தப்பட்டது. பரந்துபட்ட அளவிலான வசதிகள் மற்றும் சேவைகளை கொண்டுள்ள இந்த "ஃபுல் ஒப்சன் வெஹிகிள் எமேர்ஜன்சி பொலிஸி" ஆனது, இத்துறைக்கு வழிகாட்டியாக மிளிரும் அதேவேளை இலங்கையின் காப்புறுதித் துறையில் அண்மைக் காலங்களில் காணப்பட்ட  எப்போதுமில்லாத அளவுக்கு மிகச் சிறந்த காப்புறுதி உற்பத்திகளுள் ஒன்றாகவும் முதன்மை பெற்றுள்ளது' என்று வீரசேகர மேலும் கூறினார்.

ஜனசக்தி நிறுவனத்தின் 'எனது கார், எனது வீடு, எனது வாழ்க்கை' உற்பத்தியானது வீட்டையும் வாழ்க்கையையும் ஒன்றிணைத்த ஒன்றாக திகழ்வதுடன் காப்புறுதித் துறையில் முதன்முதலில் மேற்கொள்ளப்பட்ட அதுபோன்றதொரு முயற்சியாகவும் புகழ்பெற்றது. இதுவே இலங்கையில் சொந்தமாக பழுதுபார்க்கும் நிலையமொன்றினை கொண்டுள்ள ஒரேயொரு காப்புறுதிக் கம்பனியாகவும் திகழ்கின்றது.

"புல்ஒப்ஷன் ஒட்டோ சென்டர்" அண்மையில் தனது நான்காவது வெற்றிகரமான வருடத்தை நிறைவு செய்துள்ளது. 6,000 இற்கும் மேற்பட்ட வாகனங்களை திருத்தியமைத்த இந்நிலையம், அவற்றை மிகச் சிறந்த நிலைக்கு கொண்டுவந்துள்ளது. இந்த சேவைக்கு மேலதிகமாக அங்கீகரிக்கப்பட்ட 130 கராஜ்களின் ஊடாகவும் வாடிக்கையாளர்களுக்கு முதற்தர சேவையை ஜனசக்தி வழங்கி வருகின்றது.

'ஜனசக்தி லைஃப்' காப்புறுதியானது இணையற்ற ஒரு முதன்மைத் திட்டமாகும். அது வாழ்நாள் முழுவதும் இலவச உபசரணையை வழங்கும் ஒரு புரட்சிகரமான காப்புறுதி உற்பத்தியாகும். அதாவது, இத்திட்டத்தின் கீழ் காப்புறுதிப் பத்திரங்களை பெற்றுக் கொண்டோர் தமது வாழ்க்கை மற்றும் விபத்து தொடர்பான பாதுகாப்பினை எவ்வித கட்டணங்களும் இன்றி இலவசமாக பெற்றுக் கொள்கின்றனர். காப்புறுதிக் கொள்கை முதிர்வடைந்த பின்னரும் கூட இந்த சேவை அவர்களுக்கு கிடைக்கும்.

தனது ஆயுள் மற்றும் பொதுக் காப்புறுதிகளுக்காக
-ISO 9001:2000  சர்வதேச தரச்சான்றிதழை முதன்முதலாகப் பெற்றுக் கொண்ட இலங்கை காப்புறுதிக் கம்பனியாக ஜனசக்தி இன்சூரன்ஸ் திகழ்கின்றது. அத்துடன் சேவை நோக்கிலான அமைப்புக்களிடமிருந்து அதிகளவான விருதுகளைப் பெற்ற நிறுவனம் என்ற சிறப்புத்துவத்தையும் கொண்டுள்ளது. குறிப்பாக SLIM Brand Excellence Award 2006  நிகழ்வில் ஜனசக்தி நிறுவனமானது  No.01 சேவை வர்த்தகக் குறியீடாக தங்க விருதினைப் பெற்றுக் கொண்டது.

நாடுமுழுவதிலும் 100 இற்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ள ஜனசக்தி, 24/7 என்ற அடிப்படையில் வாடிக்கையாளர் சேவையை வழங்கி வருகின்றது. அதேவேளை, கதிர்காமம் மற்றும் கண்டி பெரஹெர, ஹிக்கடுவை கடற்கரை திருவிழா, அநுராதபுரம் பொஷன் கொண்டாட்டம் போன்ற நிகழ்வுகளுக்கு வீதியோர உதவிகளையும் அளித்து வருகின்றது.

ஒரு கூட்டாண்மை வர்த்தக நிறுவனம் என்ற வகையில் பல்வேறு சமூக செயற்றிட்டங்களில் ஈடுபட்டதன்  மூலம் ஜனசக்தி நிறுவனம் தனது சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தியுள்ளது. பாதசாரிகள் கடவையைப் பயன்படுத்தும் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பான நிகழ்ச்சித்திட்டம், ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து செயற்பட்ட சுனாமி அனர்த்த உதவி நிகழ்ச்சித்திட்டங்கள்,
Cycle Reflector செயற்றிட்டம், பாதுகாப்பான குப்பி விளக்கு திட்டம், பாதைகளின் பெயர்ப்பலகைகள், வரலாற்றுப் பிரசித்தி பெற்ற இடங்களில் விளக்கக் குறிப்புகள், கிராமப் புறங்களில் மருத்துவ முகாம்கள் மற்றும் கிரிக்கெட், ஹொக்கி, படகோட்டம், கொல்ப், ஸ்குவாஸ் போன்றன  அவற்றுள் அடங்கும்.

சிறந்த கூட்டாண்மை ஆளுகையையானது, ஒரு சமூக பொறுப்புணர்வு மிக்க நிறுவனம் என்றவாறு ஜனசக்தி இன்சூரன்ஸ் பற்றிய தோற்றப்பாட்டினை  தோற்றுவித்துள்ளது. தேசத்திற்கான கடந்த 16 வருதகால சேவையில்  வாடிக்கையாளர்கள், ஊழியர்கள், பங்குதாரர்கள் மற்றும் நாட்டுக்கு சிறந்ததும் தொடர்ச்சியானதுமான பெறுமதியை வழங்கியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .