2021 மார்ச் 03, புதன்கிழமை

SLIM சிறந்த வர்த்தக குறியீட்டு விருதுகளில் ஆண்டின் சிறந்த வர்த்தக குறியீடாக மீண்டும் மஞ்சி

Super User   / 2010 ஒக்டோபர் 12 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை சந்தைப்படுத்தல் கல்வியகம் (SLIM) இனால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் ஆண்டின் சிறந்த வர்த்தக குறியீடுகளுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிபிஎல் நிறுவனம் 6 விருதுகளை தனதாக்கிக் கொண்டிருந்தது. ஆண்டின் சிறந்த வர்த்தக குறியீடு தங்க விருதை மஞ்சி வென்றிருந்தமை
விசேட அம்சமாகும்.

மேலும் ஆண்டின் சிறந்த உள்நாட்டு தயாரிப்புக்கான குறியீட்டு தங்க விருது, ஆண்டின் சிறந்த தயாரிப்புக்கான தங்க விருது மற்றும் ஆண்டின் சிறந்த ஏற்றுமதி வர்த்தக நாமத்துக்கான தங்க விருதுகளை மஞ்சி வென்றிருந்ததுடன், சிபிஎல் சிறந்த சமூக பொறுப்புணர்வு வர்த்தக  hமத்துக்கான வெள்ளி விருதையும், றிட்ஸ்பரி ஆண்டின் சிறந்த வர்த்தக குறியீட்டு நாமத்துக்கான வெண்கல விருதையும் வென்றிருந்தது.

சிலோன் பிஸ்கட் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த புதிய கண்டுபிடிப்புகளும்,  யாரிப்பின் போது அதியுயர் தரங்களை பேணல், துல்லியமான விநியோக நடவடிக்கைகள் மற்றும் ஊழியர்களால் வெளிப்படுத்தப்பட்ட அர்ப்பணிப்பான செயற்பாடுகள் போன்றன இந்த விருதுகளின் மூலம் பறைசாற்றப்பட்டுள்ளன. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக ஊடகத்துறை அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல கலந்துகொண்டிருந்தார். நிகழ்வில் விருது வென்ற மஞ்சி தயாரிப்பின் வர்த்தக குறியீட்டு முகாமையாளர் செல்வி தேஜா பீரிஸ் கருத்து தெரிவிக்கையில், இலங்கையர்கள் மத்தியில் மஞ்சி மிகவும் பிரபல்யமடைந்துள்ளது. மெதுவாக நாம் சர்வதேச ரீதியில் மஞ்சி தயாரிப்புகளை பிரபல்யமடையச் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

அத்துடன் எமது தயாரிப்புகளின் தரம் குறித்தும் நாம் அதிகம் கவனம் செலுத்தி வருகிறோம். எமது விருதுக்கு காத்திரமாக அமைந்த அனைத்து தரப்பினருக்கும் எமது வாழ்த்துக்கள் என்றார்.

சிபிஎல் குழுமத்தின் பணிப்பாளரும் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பிரிவின் தலைமை அதிகாரியுமான நந்தன விக்ரமகே கருத்து தெரிவிக்கையில், இலங்கையின் முன்னணி நிறுவனமாக சிபிஎல் திகழ்கிறது. மஞ்சி எமது முன்னணி தயாரிப்பாகும். புதிய கண்டுபிடிப்புகள், தரம், வாடிக்கையாளர் திருப்திகரத்தன்மை மற்றும் அர்ப்பணிப்பான செயற்குழு குறித்து நாம் கவனமாக செயற்பட்டு வருகிறோம். தொடர்ச்சியாக மஞ்சி முன்னணி வர்த்தக குறியீட்டு நாமமாக தெரிவு செய்யப்படுவது எமது அனைத்து தரப்பினர்களினதும் அர்ப்பணிப்பான செயற்பாட்டுக்கு கிடைத்துள்ள வெற்றியாகும். சிலோன் பிஸ்கட் நிறுவனம் தொடர்ச்சியாக பல விருதுகளை வருடாந்தம் இலங்கை சந்தைப்படுத்தல் கல்வியகத்தினால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வில் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .