2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

ஆடைத்துறை நிறுவனங்கள் மீது முதலீட்டாளர்கள் நாட்டம்

ச. சந்திரசேகர்   / 2017 மே 22 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு மீள வழங்கப்பட்டுள்ள நிலையில், கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டுள்ள ஆடை ஏற்றுமதி நிறுவனங்களின் பங்குப் பெறுமதி பெருமளவு அதிகரிப்பை பதிவு செய்திருந்ததை அவதானிக்க முடி;ந்தது.

குறிப்பாக டீஜே லங்கா பங்குகளின் விலை கடந்த வெள்ளிக்கிழமை முதல் அதிகரிப்பை பதிவு செய்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளுக்கு ஆடை உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனம் புகழ்பெற்ற உள்நாட்டு ஆடை உற்பத்தியாளரான பிரான்டிக்ஸ் லங்கா நிறுவனத்தின் துணை நிறுவனமாகத்திகழ்கிறது.

மார்க்ஸ் அன்ட் ஸ்பென்ஸர் மற்றும் விக்டோரியாஸ் சீக்ரெட் போன்ற புகழ்பெற்ற சர்வதேச வர்த்தக நாமங்களின் கீழான ஆடை உற்பத்திகளை இந்நிறுவனம் மேற்கொள்கிறது.

ஆடை ஏற்றுமதிகள் மீதான வரிச்சலுகை மீண்டும் வழங்கப்பட்டள்ள நிலையில் நீண்ட கால அடிப்படையில் உள்நாட்டின் ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை கொழும்பு பங்குப்பரிவர்த்தனை கொடுக்கல் வாங்கல்கள் நிறைவடையும் போது டீஜே லங்கா பங்கொன்றின் விலை 41.20 ரூபாயாக பதிவாகியிருந்தது. மொத்தமாக 71,692 பங்குகள் கைமாறியிருந்தன. 78 கொடுக்கல் வாங்கல்கள் இந்த பங்கின் மீது பதிவாகியிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X