Editorial / 2020 மார்ச் 25 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் சில ஹோட்டல்கள் மாதத்தின் இறுதியில் மூடப்படவுள்ளன. சில ஹோட்டல்கள் தமது அறைகளில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகள் வெளியேறியதும் அவற்றை மூடிவிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளன. தற்போது எமது ஹோட்டல் திறந்துள்ளது, எம்மைப் போன்று மேலும் சில ஹோட்டல்கள் இந்த மாத இறுதி வரை திறந்திருக்கும். அதனைத் தொடர்ந்து ஹோட்டல்களை மூடிவிடுவது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம் என இலங்கை ஹோட்டல்கள் சம்மேளனத்தின் தலைவர் சனத் உக்வத்த தெரிவித்தார்.
ஹோட்டல்களை திறந்து வைத்திருப்பதில் எவ்விதமான பயனும் இருக்காது, சில ஊழியர்கள் கொடுப்பனவுடனும், சிலர் கொடுப்பனவுகளின்றியும் தத்தமது பகுதிகளுக்கு அனுப்பப்படுவார்கள். குறிப்பாக திருமணங்கள் மற்றும் இதர வைபவங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை அல்லது இரத்துச் செய்யப்பட்டுள்ளமையால் எம்மால் இந்த தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
தற்போது ஒரு சில விருந்தினர்கள் தங்கியுள்ளனர். வெளியேற விரும்புவோருக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படும், தங்கியிருக்க விரும்புபவர்களுக்கு தொடர்ந்து தங்கியிருக்க அனுமதி வழங்கப்படும். பெருமளவான விமான சேவைகள் தமது பயணங்களை இரத்துச் செய்துள்ளன. ஜெட்விங் போன்ற ஒரு சில ஹோட்டல்கள் வரையறுக்கப்பட்ட ஊழியர்களுடன் தொடர்ந்து செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளன.
”இந்த வைரஸ் தொற்று பரவல் பாரதூரமான நிலையாகும். முழு நாட்டையும் முடக்கி, இந்த நிலையை சீராக்க வேண்டும். அல்லாவிடின் மிகவும் மோசமான நிலையை எதிர்நோக்க வேண்டி ஏற்படும். பொது மக்கள் இது தொடர்பில் இன்னும் அதிகம் அக்கறை செலுத்த வேண்டும்.” என ஜெட்விங் தவிசாளர் ஹிரான் குரே தெரிவித்தார்.
”எமது ஹோட்டல்களில் ஒரு சில விருந்தினர்கள் மாத்திரமே தங்கியுள்ளனர். நாம் ஹோட்டல்களை மூட தீர்மானிக்கவில்லை, ஏனெனில் அறைகள் சுத்தம் செய்யப்பட வேண்டும், ஊழியர்களை தத்தமது பகுதிகளுக்கு செல்லுமாறு நாம் அறிவிக்கமாட்டோம். அவர்களுக்கான கொடுப்பனவு மேற்கொள்ளப்படும் என்பதுடன், விடுமுறையில் செல்ல விரும்பும் ஊழியர்கள், தமது சொந்த விடுமுறையில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.” என குறிப்பிட்டார்.
”சில விருந்தினர்களுக்கு தமது நாடுகளுக்கு செல்வதில் சிக்கல்கள் காணப்படுகின்றன, விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக அவர்களுக்கு வேறு வழியின்றி, தொடர்ந்து தங்கியுள்ளனர்” என குரே மேலும் குறிப்பிட்டார்.
8 minute ago
18 minute ago
23 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
18 minute ago
23 Oct 2025