2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

இலங்கை வங்கியின் புதிய அலகு

Gavitha   / 2021 ஜனவரி 11 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடன்களை மீளச் செலுத்த முடியாது சிக்கல்களை எதிர்கொண்டுள்ள நிறுவனசார் வாடிக்கையாளர்களுடன் தொடர்புகளை பேணுவதற்கு பாரம்பரியமாக கடன் மீட்டல்களை மேற்கொள்வதற்கு பதிலாக, புதிய வியாபார மீட்டு அலகொன்றை இலங்கை வங்கி நிறுவியுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த அலகினூடாக இதுவரையில் 10 க்கும் அதிகமான நிறுவனங்களுக்கு 26 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகை கடனாக வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை வங்கியின் கூட்டுறவு மற்றும் வெளிக்கள வங்கிச் சேவைகளுக்கான பிரதி பொது முகாமையாளர் டபிள்யு. என். பி. சுரவிமல தெரிவித்தார்.

எமது புதிய நோக்கம் என்பது, வியாபாரங்களை மீட்டெடுப்பதற்கு கைகொடுப்பதாகும். இயலுமை காணப்பட்ட போதிலும், மீளச் செலுத்தத் தவறும் வியாபாரங்களுக்கு எதிராக மாத்திரமே சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதுவும் இறுதிக்கட்ட நடவடிக்கையாகவே மேற்கொள்ளப்படும் என பிரதம நிதி அதிகாரி ரசல் பொன்சேகா தெரிவித்தார். மேம்படுத்தப்பட்ட செயன்முறைகளினூடாக 2020 ஆம் ஆண்டில் இலங்கை வங்கியின் தொழிற்படாக் கடன் விகிதத்தை குறைத்துக்கு கொள்ள முடிந்தது எனவும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X