2020 ஜூலை 15, புதன்கிழமை

ஒன்லைனில் எமது அந்தரங்கத்தை எவ்வாறு பாதுகாப்பது?

Editorial   / 2020 ஜூன் 29 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட்-19 சமூக தூரப்படுத்தல் காலப்பகுதியில் அதிகளவு பாவனைக்கு உட்படுத்தப்பட்ட தொடர்பாடல் Appகளில் அந்தரங்கம் தொடர்பான சிக்கல்கள் காணப்படுகின்றமை தொடர்பில் கடந்த காலங்களில் பரவலாக பேசப்பட்டன.

இவை, வழமையாக Video Conference App அல்லது Mobile Video Social Netw  orking appகளாக அமைந்திருப்பதுடன், மூன்றாம் தரப்பினருக்கு உங்கள் தரவுகளை கசியச் செய்வதற்கான அதிகளவு ஆபத்தைக் கொண்டுள்ளது. கொவிட்-19 தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அதனை கண்டறிவதற்காக வடிவமைக்கப்பட்ட appகளை பயன்படுத்துவது தொடர்பிலும் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் தமது சமூக வலைத்தளங்களில் பொழுதுபோக்கு அல்லது ஈடுபாடுகளுக்கமைவான குரூப்கள் அல்லது Communitiesகளில் இணைந்த வண்ணமுள்ளனர். ஒன்லைன் சந்தைப்பகுதியும் இக்காலப் பகுதியில் அதிகளவானோரின் ஈடுபாட்டைக் கொண்டுள்ளது.

பொருளாதார உறுதியற்ற நிலையில், பலர் ஒன்லைனில் தமக்கு தேவையானவற்றை பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கின்றனர். ஆனாலும், இந்த பொது குரூப்கள் அவர்களின் Profileகளை முன்பின் பழக்கமில்லாதவர்களுக்கு வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன என்பதை இவர்கள் உணர்வதில்லை.

உங்கள் அலைபேசியின் Privacy Settingஐ பார்வையிட்டு, அதில் காணப்படும் appகள் என்ன, அவற்றுக்கு அலைபேசியில் வேறெந்த பகுதியிலிருந்தும் தரவுகளை பெறுவதற்கான அனுமதியை வழங்கப்பட்டுள்ளதா என்பதை பார்க்க முடியும். அவசியமற்ற ஏதேனும் பகுதியை எந்தவொரு app ஏனும் அணுகுவதை அவதானித்தால், அதை off செய்யவும்.

ஏனையவருடன் பகிர்ந்து கொள்ளும் சாதனத்தை நீங்கள் கொண்டிருந்தால், நீங்கள் டைப் செய்யும் முக்கியமான தகவல்களை Autofill செய்யும் வசதியை Off செய்ய வேண்டியது முக்கியமானதாகும். எனவே, மற்றைய பாவனையாளர் உங்கள் பிரத்தியேக Profileஐ பார்வையிடமாட்டார்.

நீங்கள் பதிவு செய்யும் Appகள் தொடர்பில் அவதானமாக இருக்கவும். App Store அல்லது Play Store போன்ற நம்பத்தகுந்த ஸ்‌ரோர்களிலிருந்து மாத்திரம் Appகளை பதிவிறக்கம் செய்யவும். தரவு சேகரிப்பு, வணிக மற்றும் விளம்பர தேவைகளுக்காக உங்கள் தரவுகளை பல Appகள் அணுகுகின்றன என்பதை எப்போதும் கவனத்தில் கொள்ளவும். நீங்கள் பயன்படுத்தாத Appகள் இருந்தால் அவற்றை அழித்துவிடவும். 

உங்களின் சகல பிரத்தியேக தொடர்பாடல்களையும் ஒன்லைனுக்கு மாற்றுவது என்பது ஒரு வகை பாதுகாப்பு ஆபத்தை தோற்றுவித்தாலும், நீங்கள் அவதானமாக இருந்தால், இவ்வாறான பொறிகளிலிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X