2020 ஜூலை 11, சனிக்கிழமை

சந்தையில் DSI Gen X டயர்

Editorial   / 2019 மார்ச் 14 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

DSI டயர் நிறுவனம் தனது Gen X மோட்டார் சைக்கிள் டயர்களைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இரவு நேர பயணத்தின் போது, ஓட்டுநரை எளிதில் இனங்காணக்கூடிய வகையில் Neon Effect வசதிகளுடன் இலங்கைக்கு முதன் முறையாக அறிமுகப்படுத்தும் Gen X ஸ்கூட்டர் டயர் ஓட்டுநரின் பாதுகாப்​பைச் செம்மையாக உறுதிபடுத்துகிறது.  

இலங்கையில் வாகன விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதோடு அண்மைய காலத்தில் மோட்டார் சைக்கிள் விபத்துகளே அதிகளவில் நிகழ்ந்துள்ள அதேவேளை (2017 ஆம் ஆண்டு - 2497 விபத்துகள்) இவ்விபத்துகளால், அதிகளவில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களே உயிரிழந்துள்ளதாக (2017ஆம் ஆண்டு - 1011 மரணச் சம்பவங்கள்) ஸ்ரீ லங்கா பொலிஸ் வெளியிட்டுள்ள தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.  

ஆகவே அவர்களின் பாதுகாப்பு தொடர்பாக சிறப்பு கவனம் செலுத்தி விஞ்ஞானபூர்வமாக உற்பத்தி செய்யப்பட்டுள்ள Gen X டயர்களில் உள்ள பாதுகாப்பு கவசம் காரணமாக மழைக் காலங்களில் டயருக்கும் நிலத்துக்குமிடையே நீர் படிமமொன்று உருவாகாததால் (Avoid Aquaplaning) வழுக்கும் தன்மை ஏற்படாது. Gen X டயரில் உள்ள வர்ண ஸ்டிக்கர் மூலம் அது உன்னதமான தோற்றத்தை பெற்றுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .