2020 ஜூலை 07, செவ்வாய்க்கிழமை

சிக்னேச்சர் ‘Colours of Nature’ ஆடைத் தெரிவுகள்

Editorial   / 2019 ஜூன் 11 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் ஆடவர் ஆடை வர்த்தகக் குறியீடாகத் திகழும் ‘சிக்னேச்சர்’ (Signature) ஆனது, எதிர்வரும் கோடைக்காலத்தை முன்னிட்டு ‘Colours of Nature’ (இயற்கையின் வர்ணங்கள்) என்ற பெயரில் மனங்கவரும் கொடுக்கல்வாங்கல் வெகுமதிகளோடு புத்தம்புதிய மற்றும் உயிர்த்துடிப்புமிக்க ஆடைத் தெரிவுகளை இப்போது அறிமுகம் செய்துள்ளது. 

கண்ணைக்கவரும் புதிய தொடரிலான வர்ணங்கள் மற்றும் உலகெங்கும் தற்போது நவநாகரிக போக்காக காணப்படுகின்ற வடிவமைப்புக்களை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆடைத் தெரிவுகள், அயன மண்டலப் பகுதிகளில் வாழ்கின்ற மனஅழுத்தமற்ற, நாகரிகத்தன்மையான இளம் ஆடவர்களுக்கு மிகப் பொருத்தமானவையாக காணப்படுகின்றன.

கோடைக்கால உணர்வதிர்வுகளை வெளிப்படுத்தும் அதேநேரத்தில் இயற்கையான சௌகரியத்தை உணரச் செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய சிக்னேச்சர் ஆடைத் தெரிவுகள், எமது இலங்கையின் காலநிலைக்கு மிகவும் பொருத்தமானவை ஆகும்.

இப்புதிய ஆடைத் தெரிவுகள் முறைசார், கசுவல் நிகழ்வுகளுக்கு பொருந்தும் வகையில் காணப்படுவதுடன், ஒவ்வொரு நாளும் அணிவதற்கு ஏற்ற தராதரம் இழையோடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆணுக்கும் பொருந்தும் விதத்திலான பல்வேறு வடிவமைப்புக்களை உள்ளடக்கியதாக இந்தசேர்ட்கள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அந்த நபரின் தனிப்பட்ட ஸ்டைலை மேம்படுத்தக் கூடியதாகவும் காணப்படுகின்றது. 

இச் சிறப்பம்சங்களுக்கு மேலதிகமாக, 2019 ஜூன் 14 ஆம் திகதி வரை அனைத்து சிக்னேச்சர் காட்சியறைகளிலும் ஆடைக் கொள்வனவை மேற்கொள்வோருக்கு சிறந்த கொடுக்கல் வாங்கல் வெகுமதிகளையும் சிக்னேச்சர் வழங்குகின்றது.

கொள்வனவு செய்யப்படும் ஒவ்வொரு 4 உருப்படிகளுக்குமாக 5ஆவது ஆடை இலவசமாக வழங்கப்படும். அத்துடன், கொள்வனவு செய்யப்படும் ஒவ்வொரு 4 உருப்படிகளிலும் மிகவும் விலை குறைந்த ஆடைக்கு 60% கழிவு வழங்கப்படும்.

அதேநேரம், 3 உருப்படிகளை கொள்வனவு செய்யும் போது விலை குறைந்த ஆடைக்கு 30% கழிவு வழங்கப்படும். மேலும், பல்வேறு வங்கிகளின் கடனட்டைகள் ஆடைக் கொள்வனவாளர்களுக்கு இதற்கு மேலதிகமான விலைக் கழிவுகளை வழங்குகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .