2021 மார்ச் 03, புதன்கிழமை

நீரிழிவு நோயாளர்களுக்கு ஆர்பிகோ இன்சூரன்ஸின் Diabcare

Johnsan Bastiampillai   / 2020 ஒக்டோபர் 15 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாடிக்கையாளர்களுக்கு அவசியமான வேளைகளில் ஒப்பற்ற சேவைகளைப் பெற்றுக் கொடுக்க, தன்னை அர்ப்பணித்துள்ள ஆர்பிகோ இன்சூரன்ஸ் பிஎல்சி, நீரிழிவு நோயாளர்களுக்காக பிரத்தியேகமாக அமைந்த Diabcare காப்புறுதித் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.  

இலங்கையில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் நீரிழிவிவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என, இலங்கை நீரிழிவு சம்மேளனத்தின் தேசிய நீரிழிவு நிலையத்தால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில், நீரிழிவால் பாதிக்கப்பட்ட சுமார் 463 மில்லியன் ​ேபர், குறைந்த, மத்தியளவு வருமானமீட்டும் நாடுகளில் வாழ்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆறு நொடிகளுக்கும் தலா ஒரு நபர் வீதம் நீரிழிவு நோயால் உயிரிழக்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுவதுடன், அமைதியான உயிர்கொல்லியாகவும் அறியப்படுகின்றது.  

உலகில் காணப்படும் நான்கு பிரதான தொற்றா நோய்களில் ஒன்றாக நீரிழிவு காணப்படுகின்றது. கடந்த காலத்தில், நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுகாதாரக் காப்புறுதியொன்றைப் பெற்றுக் கொள்வது என்பது மிகவும் கடினமான காரியமாக அமைந்திருப்பினும், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மீளாய்வுகளினூடாக காப்புறுதியைப் பெற்றுக் கொள்வது இலகுவாக்கப்பட்டுள்ளது.

ஆர்பிகோ இன்சூரன்ஸ் பிஎல்சியின் தாய் நிறுவனமான, றிச்சர்ட் பீரிஸ் குழுமத் தவிசாளர் கலாநிதி. சேன யத்தெஹிகேவின் நோக்கமான, அனைத்து இலங்கையர்களுக்கும், அவர்களுக்கு தேவையான போது சேவைகளை வழங்குவது என்பதன் பிரகாரம், ஆர்பிகோ இன்சூரன்ஸ், தற்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தப் பிரத்தியேகமான காப்புறுதியை வழங்க முன்வந்துள்ளது.  

ஆர்பிகோ இன்சூரன்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹர்ஷ டி அல்விஸ் கருத்துத் தெரிவிக்கையில், “நீரிழிவு என்பது முறையாகப்  பராமரிக்கப்படா விட்டால், உண்மையில் ஆயுளைப் பாதிக்கும் ஒரு நோயாக அமைந்துள்ளது. இலங்கையில் இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமுள்ளது. முன்னணி காப்புறுதி சேவை வழங்குநர் எனும் வகையில், எமது மக்கள், சமூகத்தாருடன் இணைந்திருப்பது என்பதற்கமைய நாம் செயலாற்றுகின்றோம். நாம் இன்றைய காலகட்டத்தில் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு சிறந்தத் தீர்வைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் கவனம் செலுத்துகின்றோம்” என்றார்.  

“Diabcare என்பது வாடிக்கையாளர்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவதுடன், இந்த நோயை கட்டுப்படுத்திக் கொள்வதற்கு அவசியமான உதவிகளை வழங்குவதாகவும் அமைந்துள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டார். காப்புறுதிதாரர் உயிரிழந்தால் அல்லது அவருக்கு புற்றுநோய், பக்கவாதம், குருட்டு நிலை / முழுமையான பார்வை இழப்பு, இறுதிக் கட்டத்திலுள்ள சிறுநீரக செயலிழப்பு (ESRF), உடல் உறுப்பு ஒன்றை நீக்க வேண்டிய நிலை போன்ற ஏதேனும் பாரதூரமான நிலைகளின் போது காப்பீடு செய்யப்பட்ட தொகை செலுத்தப்படும்.  

மேலும், காப்புறுதித் திட்டம் மூன்று வருட காலப்பகுதியை பூர்த்தி செய்ததும், காப்புறுதிதாரருக்கு வைத்தியரால் பரிந்துரைக்கப்படும் நீரிழிவு தொடர்பான பரிசோதனைகளுக்குரிய மருத்துவச் செலவுகளை வருடமொன்றுக்கு ரூ. 5,000 வரை காப்புறுதி நிறைவடையும் வரை ஈடு செய்து கொள்ள முடியும்.   

2004ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது, இலங்கையின் காப்புறுதித் துறை என்பது தொடர்ச்சியாக வாடிக்கையாளர்கள் தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தது. கொரோனா வைரஸ் தொற்று பரவிய போது, ஆர்பிகோ இன்சூரன்ஸ் முதன் முதலில் முன்வந்து சகல காப்புறுதிதாரர்களின் மருத்துவ, ஆயுள் இழப்பீடுகளை முதன் முதலில் ஈடு செய்த காப்புறுதி நிறுவனங்களில் ஒன்றாகும்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .