S.Sekar / 2021 ஏப்ரல் 05 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை வங்கியின் கெஸ்பேவ கிளை, வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் வங்கிச் சேவையினை வழங்கும் பொருட்டு இல.2/3/2, ஹெரனை வீதி, கெஸ்பேவ என்னும் முகவரிக்கு அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வானது இலங்கை வங்கியின் விற்பனைகள் மற்றும் நெறிப்படுத்தல் முகாமைத்துவக்கான பிரதிப் பொது முகாமையாளர் பிரியல் சில்வாவின் பங்கேற்புடன் இடம்பெற்றது. இலங்கை வங்கியின் கெஸ்பேவ கிளையானது அப்பகுதி மக்களின் சமூகப் பொருளாதார நலன்களை மேம்படுத்தும் நோக்குடன் நிதியுதவிகளை வழங்குவதÇடாக மிகவும் அர்ப்பணிப்பான சேவைகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வாடிக்கையாளர்களுக்கு மேலும் வங்கியியல் வசதிகளை வழங்குவதற்காக விசாலமான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட சுற்றுப்புறத்துடன் டிஜிட்டல் வங்கியியல்; சேவைகளும் இதனூடாக விஸ்த்தரிக்கப்பட்டுள்ளன. சில்லறை வங்கியியலுக்கான பிரதிப் பொது முகாமையாளர் பீ. கே. குருசிங்க (நிலை II), மேல் மாகாணம் தென் பிராந்தியத்துக்கான உதவிப் பொது முகாமையாளர் திருமதி டபிள்யு.கே.எல்.பீ.என்.சமன்தி, மாகாண விற்பனை முகாமைத்துவத்துக்கான உதவிப் பொது முகாமையாளர் திருமதி டீ.ஆர்.சீ.எஸ்.உதயகுமாரி மற்றும் கரைகடந்த வங்கியியலுக்கான உதவிப் பொது முகாமையாளர் ஐ.எஸ்.என்.பெரேரா ஆகியோர் வங்கியின் நிறுவன மற்றும் நிறைவேற்று முகாமைத்துவத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மேல் மாகாணத்தின் தென் பிராந்திய அலுவலகத்தின் அதிகாரிகளும், வாடிக்கையாளர்களும் ஏனைய முக்கிய பிரமுகர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். இந்நிகழ்வானது கெஸ்பேவ கிளையின் முகாமையாளர் மற்றும் அதன் ஆளணியினரால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
15 minute ago
44 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
44 minute ago
1 hours ago