2020 மே 29, வெள்ளிக்கிழமை

புதிய வரி முறைகள்

அனுதினன் சுதந்திரநாதன்   / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் புதிய அமைச்சரவையின் தீர்மானத்தின் பிரகாரம், கடந்த வாரத்தில் புதிய வரி முறைகள் இலங்கையில் அமுலாக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், சில வரிகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. சில வரித் திருத்தங்கள் இந்த மாதத்தில் நடைமுறைக்கு வந்துள்ளதுடன், ஏனையவை, அடுத்த ஆண்டின் ஆரம்ப நாள் முதல் அமுலாக்கப்பட இருக்கிறது.  

இலங்கைக்கு இந்த வரித் திருத்தங்கள், வரி நீக்கங்கள் மூலமாக, பல்வேறு வருமான இழப்புகள் உள்ளபோதிலும், அதற்கான மாற்றீடுகளையோ அல்லது அதற்கான பொருத்தமான வருமான மாற்று வழிமுறைகள் தொடர்பிலோ அரசாங்கம் கருத்துகளை வெளியிடவில்லை. மாறாக, இலங்கையின் நிர்வாக அமைப்பிலான மாற்றங்களிலும், வரித் திருத்தங்களிலுமே அதீத கவனத்தையே இந்த அரசாங்கம் செலுத்தி வருகிறது.  

உண்மையில், இந்தக் கவனமானது, வினைத்திறனற்றுக் கிடக்கின்ற இலங்கையின் அரசியல் செயற்பாடுகளுக்கு மிக அவசியமான ஒன்றாக உள்ளபோதிலும், நாம் இழக்கின்ற வருமானத்தை ஈடுசெய்ய, இந்தச் செயற்பாடுகள் போதுமானதா எனும் கேள்விக்கு, முழுமையான பதில் இல்லையென்பதே பதிலாக வருகின்றது. அத்துடன், இந்தப் புதிய அரசாங்களம் எதிர்வரும் சில மாதங்களுக்கு, தமது ஆட்சி​ையக் கொண்டு நடத்தத் தற்காலிக பாதீடென அழைக்கப்படும் Vote on Account ஐ சமர்ப்பிப்பதற்கான ஆயத்தங்களை முன்னெடுத்துக்கொண்டிருக்கிறது. இதன்போது, சிலவேளைகளில் வரி மாற்றங்கள் காரணமாக இழக்கப்படும் வருமானத்துக்கு மாற்றீட்டுத் திட்டங்களை அல்லது கடன் பெறுகை விவரங்களை முன்வைக்கலாம்.   

இதற்கிடையில், திட்ட வரைவாக கடந்த வாரத்தில் அறிவிக்கப்பட்ட வரித் திட்டங்கள், வரிச் சலுகைகள் தொடர்பான விரிவான விடயங்க​ைள இறைவரித் திணைக்களம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டிருக்கிறது. அவற்றில் அவசியமானதும் கட்டாயமாக அறிந்திருக்க வேண்டியதும் தொடர்பிலானவற்றைப் பார்க்கலாம்.  

PAYE, வருமான வரி

PAYE வரியானது, மாதாந்த வருமானமான 250,000 ரூபாய்க்கும் மேற்பட்டதாக இருக்கும் பட்சத்தில், நீங்கள் செலுத்த வேண்டிய வரியாக இருக்கும். இதற்கு மேற்படுகின்ற வருமானமானது, ஒவ்வொரு 250,000 ரூபாய்க்கும் 6 சதவீதம், 12சதவீதம்,  18 சதவீதமென வரிவிதிப்புக்குள்ளாகும்.இதன்காரணமாக, கடந்த காலங்களில் குறைவாக PAYE வரியைச் செலுத்திய, வருமானம் கூடியவர்கள் தற்போது அதிக வரியைச் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இது, இந்த வரியின் இழிவுநிலை மட்டத்​ைத அதிகரிப்பதன் மூலமாக இழக்கப்படும் வருமான வரி​ைய  ஈடுசெய்யக் கூடியதாக இருக்கும்.  

 அதேபோல, தனிநபர் வருமான வரி விதிப்பிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதன்பிரகாரம், கடந்த காலத்தில் 600,000 ரூபாய்  வருமானத்துக்கு வரிவிலக்கு வழங்கப்பட்டதுடன், அடுத்துவரும் ஒவ்வொரு 600,000 ரூபாய்க்கும் முறையே 4 சதவீதம், 8 சதவீதம், 12 சதவீதம், 16 சதவீதம், 20 சதவீதம், 24 சதவீதம் என, வரி விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், வருமானவரி விதிப்பு முறையும் நீக்கப்பட்டு புதிய வரி விகிதமான, 6 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  

அதுபோல, ஊழியராக வேலை செய்பவர்கள், தனிநபர் வருமானத்​ைதக் ​  கொண்டிருக்கக் கூடிய அனைவருமே மாதாந்த வருமானத்ைத  250,000  ரூபாய்க்கு அதிகமாகப் பெறுவார்களாயின், அவர்கள் அனைவருமே தமது வருடாந்த வரிப்பத்திரத்தை அடுத்த வருடம் முதல் இறைவரித் திணைக்களத்தில் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகிறது.  

WHT வரி

கடந்த ஆட்சியில் அமுலாக்கம் செய்யப்பட்ட இந்த வரியில், இலங்கையின் சிரேஷ்ட பிரஜைகள் மாத்திரமே நலனைப் பெற்றிருந்தார்கள். ஆனால், தற்போது மாதாந்த வட்டி வருமானமாக 250,000 சதவீதத்துக்குக் குறைவாகப் பெற்றுக்கொள்ளும் அனைவருமே வட்டி வருமான வரிவிதிப்பிலிருந்து விலக்களிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த வரிவிலக்களிப்பானது, 2020ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வருவதுடன், இந்த விரிவிலக்​ைகப் பெற்றுக்கொள்ள உங்களது தகவல்களை வங்கிக்கு வழங்குவது மிக அவசியமானதாகும்.   

VAT / பெறுமதிசேர் வரி

பெறுமதிசேர் வரியின் எல்லையானது, நிதியியல் நிறுவனங்களைத் தவிர, ஏனையவற்றுக்கு உடனடியாக அமுலுக்கு வரும்வகையில், 15 சதவீதத்திலிருந்து 8சதவீதமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. அதுபோல, பெறுமதிசேர் வரிக்கான எல்லை​ையயும், இந்தப் புதிய அரசாங்கமானது அதிகரித்திருக்கிறது.  

இலங்கையில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதலுக்குப் பின்னதாக நலிவடைந்துள்ள சுற்றுலாத்துறைக்கு ஊக்கமளிக்கும் பொருட்டு, 60 சதவீதம் உள்நாட்டு உற்பத்திகளைப் பயன்படுத்தும் சுற்றுலாத்துறை நிறுவனங்களுக்கு 7சதவீதம் பெறுமதிசேர் வரியானது, முற்றாக விலக்களிக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக, இந்த நிறுவனங்கள் உள்நாட்டு உற்பத்திகள், தொழிலாளர்களை அதிகமாகப் பயன்படுத்துவதுடன், செலவீன குறைப்பும் நிகழ சாத்தியமாகும்.  

இவற்றுக்கு மேலதிகமாக, வெளிநாட்டு வருமானத்தை நாட்டுக்குள் கொண்டுவரும் தனிநபர், நிறுவனங்களுக்கு முற்றாக வரிவிலக்களிக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில், குறிப்பிட்ட சில சமயங்களில் மாத்திரம் வெளிநாட்டு வருமானமானது, 14 சதவீதம் வருமான வரி விதிப்புக்குள்ளாக்குவதாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.  

அதுபோல, நாட்டின் சமய ஸ்தலங்கள் அனைத்துமே தாம் உழைக்கின்ற அனைத்துவகை வருமானத்துக்கும் இனிவரும் காலத்தில், வரியைச் செலுத்த வேண்டியதில்லை. குறிப்பாக, கடந்த காலங்களில் தன்னார்வத் தொண்டு,  சமய ஸ்தலங்களுக்கு கிடைக்கப்பெறும் நன்கொடைகள், வருமானங்களுக்கு 14 சதவீதம் வரி விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.   

அதேபோல, நாட்டின் தகவல்தொழில்நுட்பச் செயற்பாடுகளைச் சார்ந்த நிறுவனங்களுக்கு முழுமையாக வரிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. வருமானவரி, பெறுமதிசேர் வரி உட்பட அனைத்துவகை வரியிலிருந்தும் இந்தச் சலுகை வழங்கப்பட்டிருக்கிறது. புதிய அரசாங்கத்தின் தொழில்நுட்ப சார் செயற்பாடுகளுக்கு வழங்கும் ஊக்குவிப்பின் ஒருபகுதியாக இந்தச் செயற்பாடானது நடைமுறைக்கு வந்திருக்கிறது.   

அத்துடன், இதுவரை காலமும் விவசாயத்துறை சார்ந்த நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட வருமான வரி முற்றுமுழுதாக நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன், கட்டுமானத்துறையின் மீதான வருமான வரி விகிதமானது 28 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாகக் குறைக்கப்படுவதாக அறிவித்திருக்கிறார்கள். இதன் மூலமாக, கட்டுமானத்துறை இறக்குமதி வரி மூலமாக இழக்கப்படும் வருமானத்தை ஈடுசெய்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.   

இந்த ஒட்டுமொத்த வரிச்சலுகை,  நிவாரணங்கள் மூலமாக, அரசாங்கத்துக்கு ஆகக்கூடிய வருமான இழப்பு சுமார் 345-370 பில்லியனாக இருக்கக்கூடுமெனக் கணக்கிடப்பட்டிருக்கிறது. அத்துடன், இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலின் காரணமாக 2020ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தைச்​ சமர்ப்பிக்காமல் நான்கு மாதங்களுக்கு நாட்டைக் கொண்டு நடாத்துவதற்கான, VOTE ON ACCOUNT சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இதன் பிரகாரம், நாட்டின் அரச கரும செலவீனங்கள் மாத்திரம் 751 பில்லியனாக இருக்கின்றது. இதனைப் பூர்த்தி செய்யப் போதுமான வருமானத்தை இலங்கை கொண்டிருக்காமையினால், சுமார் 721 பில்லியன் ரூபாயைக் கடனாகப் பெற அமைச்சரவை அனுமதியைப் பெற்றிருந்தார்கள். இந்த 721 பில்லியன் ரூபாய், தற்போது இந்த வரிச்சலுகை மூலமாக முதல் நான்கு மாதங்களில் ஏற்படக்கூடிய செலவீனங்கள் என்பனவற்ைற  இலங்கை அரசாங்கம் எவ்வாறு ஈடுசெய்யப் போகின்றது என்பதே கேள்விக்குறியாக உள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X