2020 ஜூலை 07, செவ்வாய்க்கிழமை

ஹேமாஸ் தலைமை நிர்வாக அதிகாரியாக கஸ்தூரி வில்சன்

Editorial   / 2020 ஜூன் 29 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி குழுமம், அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக, ஸ்டீவன் எண்டர்பிக்கு அடுத்தபடியாக ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் கஸ்தூரி செல்லராஜா வில்சனை நியமிப்பதாக அறிவித்துள்ளது. நீண்ட கால தலைமைத்துவ மாற்றத் திட்டத்துக்கு ஏற்ப, அடுத்த மாதம் 1ஆம் திகதி முதல், கஸ்தூரி துணை தலைமை நிர்வாக அதிகாரியாகவும் ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் நியமிக்கப்படுவார்.

“எங்கள் நிறுவனத்தின் அகத் திறமைகளை வளர்ப்பதற்கு முன்னுரிமை வழங்கும் நமது தலைமைத்துவ மாற்றத் திட்டத்துக்கு ஏற்ப முழுமையானத் தேர்வு செயல்முறையைத் தொடர்ந்து, கஸ்தூரியை குழு தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்க பணிப்பாளர் சபை முடிவு செய்தது. 2002ஆம் ஆண்டு முதல், எங்களுடன் இருந்த கஸ்தூரி, ஹேமாஸுக்கு புதியவரல்ல. மேலும் எமது நீண்டகால சக-ஊழியர் குழுமதத்தின் மிக உயர்ந்த நிர்வாகப் பதவியை வகிக்க, உயர்ந்துள்ளதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்”  என ஹேமாஸ் ஹோல்டிங்ஸின் தலைவரான ஹுசைன் ஏசுஃபலி தெரிவித்தார். 

இந்த மாற்றம் குறித்து, ஏசுஃபலி மேலும் கருத்து கூறுகையில், கடந்த ஆறு ஆண்டுகளில் ஸ்டீவனின் தலைமை, ஹேமாஸை மிகவும் நெறிப்படுத்தப்பட்ட, நோக்கமான, பயனுள்ள அமைப்பாக மாற்ற உதவியது. இது எங்கள் எதிர்காலத்தை நல்ல நிலையில் அமைக்க உதவும். பல ஆண்டுகளாக ஹேமாஸுக்கு அளித்த மகத்தான பங்களிப்புக்காக ஸ்டீவனுக்கு நன்றி தெரிவிப்பதில் பணிப்பாளர் சபை என்னுடன் இணைகிறது. மேலும், ஹோட்டல்துறையில் எங்கள் வணிகங்களின் பணிப்பாளர் சபைகளின் உறுப்பினராக ஸ்டீவன் தொடர்ந்து எங்களுடன் இணைந்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

“எதிர்வரும் காலம் எமக்கு இலங்கையிலும் ஆசிய பிராந்தியத்திலும் பல வாய்ப்புகளை முன்வைக்கிறது, இது தற்போதுள்ள எங்கள் வணிகங்களை வளர்ப்பதற்கு மட்டுமல்லாமல், நமது முக்கிய வணிகங்களான நுகர்வோர், சுகாதாரம், இயக்கம் ஆகிய துறைகளின் ‘புதிய வளர்ச்சி’ பகுதிகளை விரிவுபடுத்துவதற்கும் பயனாகும். ஹேமாஸின் வருவாய் கடந்த ஐந்து ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. மேலும் எதிர்வரும் ஆண்டுகளில் வேகமான வளர்ச்சியை நாங்கள் நிச்சயமாக எதிர்பார்க்கிறோம்” என்று அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .