2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

கொழும்பு கிராண்ட் ஒரியன்ட்ல் பகுதியில் 1 பில். அமெ.டொ. முதலீடு

A.P.Mathan   / 2012 நவம்பர் 16 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலுள்ள சுமார் 170 வருட காலம் பழமையான ஆங்கிலேயர்களின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட கிராண்ட் ஒரியன்டல் ஹோட்டல் மற்றும் அதனை சூழ்ந்து காணப்படும் பொலிஸ் திணைக்களத்துக்கு சொந்தமான பகுதிகளையும் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்பை, இலங்கை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. PPP திட்டத்துக்கு அமைவாக இந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், ஹோட்டலின் பாரம்பரிய தோற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்தாத வகையில் அமையவுள்ளது.

இந்த அபிவிருத்தி திட்டத்துக்கான திட்ட வரைபை ஹோட்டலின் உரிமையாண்மை வங்கியான, இலங்கை வங்கி ஏற்கனவே திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று கட்டமாக இந்த அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. கிராண்ட் ஒரியன்டல் ஹோட்டலானது கொழும்பு கோட்டை பகுதியில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .