2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

புளியங்குளத்தில் எரிபொருள் விற்பனை நிலையம்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 13 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள்கள் விற்பனை நிலையம் இன்று புதன்கிழமை காலை வவுனியா வடக்கு பிரதேசமான  புளியங்குளத்தில் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

மாவட்ட அரச அதிபர் திருமதி.பி.எம்.எஸ்.சாள்ஸ் விற்பனை நிலையத்தினை திறந்துவைத்தார். வவுனியா வடக்கு பிரதேசத்தில் இடம்பெயர்ந்த 90 சதவீதமானவர்கள் மீள்குடியேறிய நிலையில் விவசாய நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்ற இத்தருணத்தில் எரிபொருள் தேவையினை கருத்தில் கொண்டு இந்த நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

இந்த வைபவத்தில் வடமாகாண பிராந்திய பிரதி பொது முகாமையாளர் எஸ்.சண்முகநாதன், வடமத்திய மாகாண பிராந்திய பிரதி பொது முகாமையாளர் எம்.திலகரட்ண, எரிபொருள் நிலைய உரிமையாளர்  எஸ்.கே.காதர் மற்றும் புளியங்குளம், மாங்குளம் பிரிவு சிரேஸ்ட பொலிஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .