2020 நவம்பர் 25, புதன்கிழமை

செரண்டிப் ப்ளார் மில்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் கௌரவிப்பு

A.P.Mathan   / 2013 ஜூலை 25 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


செரண்டிப் ப்ளார் மில்ஸ் (செரண்டிப் மா ஆலை) நிறுவனமானது, தனது முதன்னிலை வாடிக்கையாளர்கள் பத்துப்பேரை ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய்க்கு சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றதன் மூலம் அவர்களைப் பாராட்டி உபசரித்துள்ளது. இச் சுற்றுலாவின் போது அவர்கள் செரண்டிப் ப்ளார் மில்ஸ் இன் தாய் நிறுவனமாக திகழும் அல்-குரைர் ஃபுட்ஸ் கம்பனிக்கு விஜயம் செய்தனர். 
 
இலங்கை முழுவதிலும் உள்ள 500 முக்கியமான வாடிக்கையாளர்களிடையே கடந்த ஆறு மாதங்களாக நடாத்தப்பட்ட பிரசாரத் திட்டத்தின் அடிப்படையில் இந்த சுற்றுப் பயணம் ஒழுங்கு செய்யப்பட்டது. அதன்படி, மேற்குறிப்பிட்ட காலப் பகுதியில் அதிகளவான கொள்வனவுகளை மேற்கொண்ட மிகச் சிறந்த பேக்கரி உரிமையாளர்கள் / வாடிக்கையாளர்கள் குறும்பட்டியல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 
 
துபாய்க்கான 3 நாள் சுற்றுப் பயணத்தின் போது பத்து அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களும் துபாயிலுள்ள நஷனல் ப்ளார் மில்ஸ், ஜெபல் அலி மில்ஸ் மற்றும் ஜெனான் பஸ்டா, ஸ்பக்ஹெட்டி ஆகிய நிறுவனங்களுக்கும் அதேபோன்று ஜெபல் அலி வளாகத்தில் அமைந்துள்ள நூடில்ஸ் உற்பத்திக்கான தொழிற்சாலையையும் பார்வையிட்டனர். அவர்கள் அதிகமான விடயங்களைக் கற்றுக் கொண்டமையினால் இது மிகவும் அறிவூட்டும் ஒரு பயணமாகவும் அமைந்தது. குறிப்பாக, கோதுமை தானியம் முதல் இறுதி உற்பத்தி வரையான மா உற்பத்திச் செயன்முறை பற்றிய முழு விபரங்களையும் அவர்கள் முதன் முதலாக கண்டறிந்து கொண்டனர். 
 
இவ் வாடிக்கையாளர்கள் ஓய்வு நேரத்தை துபாய் பாலைவன சவாரியில் பொழுதைக் கழித்தனர். இங்கு இடம்பெற்ற நிகழ்ச்சிகளுள் ஒரு திறந்தவெளி விருந்தான 'Dune Bashing' மற்றும் 'பெலி நடனம்' போன்றவையும் உள்ளடங்கியிருந்தன. 
 
இதைப்போன்றே இன்னுமொரு தெரிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளர்கள் குழு மலேசியாவின் கோலாலம்பூர் நகருக்கு சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அண்மைக்காலம் வரை உலகின் மிக உயரமான கட்டிடமாகக் காணப்பட்ட பெட்ரோனாஸ் கோபுரங்கள், தேசிய பள்ளிவாசல் போன்றவற்றுக்கு இதன்போது அவர்கள் விஜயம் செய்தனர். மலேசிய சுற்றுலாவில் நீரை தொனிப்பொருளாகக் கொண்ட 'சன்வே களப்பு வடிவ' பூங்காவிலும் வெற்றியாளர்கள் முழு நாளையும் உல்லாசமாக கழித்தனர். 
 
'இலங்கையில் நாம் அடைந்துள்ள வெற்றிக்கு எமது வாடிக்கையாளர்கள் மிக முக்கியமான பங்கினை வகிக்கின்றனர். ஐந்து வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் நாம் எமது மா உற்பத்தியை அறிமுகப்படுத்தியதில் இருந்து இவ் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து எம்முடன் இணைந்திருக்கின்றனர். இந்த சுற்றுப் பயணம் மகிழ்ச்சிகரமான ஒன்றாக மாத்திரமன்றி மிக அறிவூட்டும் பயணமாகவும் அமைந்தது. ஏனென்றால், தமது வாழ்க்கையில் அவர்கள் ஒவ்வொரு நாளும் இரண்டறக் கலந்து பணியாற்றுகின்ற ஒரு உற்பத்தி தொடர்பான மறைவான விபரங்கள் பலவற்றை அறிந்து கொண்டுள்ளனர். அவர்கள் வெளிப்படுத்திய ஆர்வம் மிக உன்னதமானதாக காணப்பட்டதுடன், நாம் பெற்றுக் கொண்ட பின்னூட்டல் கருத்துக்கள் மிக நம்பிக்கை அளிப்பனவாகவும் உள்ளன. உண்மையில், எதிர்காலத்தில் இந்த முன்னெடுப்பை வருடந்தோறும் மேற்கொள்வதற்கு நாம் எண்ணியுள்ளோம்' என்று செரண்டிப் ப்ளார் மில்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பணிப்பாளருமான திரு. சதாக் அப்துல் காதர் தெரிவித்தார்.
 
ஐக்கிய அரபு இராச்சியம் - துபாயை தளமாகக் கொண்டியங்கும் அல் குரைர் குழுமக் கம்பனிகளின் ஒரு துணை நிறுவனமான செரண்டிப் ப்ளார் மில்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் ஆனது, 'புதுத்தன்மையான' (Freshness) கோதுமை மாவினை தங்குதடையற்ற விதத்தில் விநியோகித்தல்' எனும் தனது வாக்குறுதிக்கு அமைவாக 'செவன் ஸ்டாh'; வர்த்தக குறியீட்டிலான கோதுமை மாவின் விநியோகத்தை ஆரம்பித்ததன் மூலம் இலங்கையில் தனது வர்த்தக ரீதியிலான செயற்பாடுகளை 2008 ஜூன் மாதத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைத்தது. மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் முன்னணி மா ஆலையாக திகழும் - அல் குரைர் குழுமத்தின் கீழியங்கும் நெஷனல் ப்ளார் மில்ஸ் (LLC) ஆனது இந்நிறுவனத்திற்கு பக்கபலமாக செயற்பட்டு வருகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .