2020 ஓகஸ்ட் 08, சனிக்கிழமை

AIAஇன் தலைவராக லீ யுஆன் சியோங்

Editorial   / 2020 ஜூன் 11 , மு.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

AIA குழும லிமிட்டெட்டின் தலைவராகவும் குழுமத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியாகவும் லீ யுஆன் சியோங் தனது பதவியைப் பொறுப்பே ற்றுள்ளதோடு, நிறுவனத்தினது பணிப்பாளர் சபையிலும் தன்னை இணைத்துள்ளதாக, நிறுவனம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. AIA  நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து என்ஜி கெங் ஹுய் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்தே, இவர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

AIA  நிறுவனத்தில் இணைவதற்கு முன்னர், சீனாவின் பிங் என் இன்ஷுரன்ஸ் (குழும) லிமிட்டெட் நிறுவனத்தில் நிறைவேற்றுப் பணிப்பாளர் பதவியை லீ வகித்திருந்ததுடன், நிறுவனத்தினுடைய இணைப் பிரதான நிறைவேற்று அதிகாரியாகவும் பிரதான காப்புறுதி வியாபார உத்தியோகத்தராகவும் பணியாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் லீ யுஆன், பிங் என் நிறுவனத்தில் இணைவதற்கு முன்னதாக, ஐக்கிய இராஜ்ஜியத்தின் ப்ருடென்ஷியல் பிஎல்சி நிறுவனத்தில் சிரேஷ்ட தலைமைப் பதவியையும் வகித்திருந்ததுடன், இவர் தனது தொழில் பயணத்தை சிங்கப்பூரின் பணவியல் ஆணையத்திலேயே ஆரம்பித்திருந்தார் எனவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--