2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

SeylanPay QR கொடுப்பனவுத் தீர்வுகள் அறிமுகம்

S.Sekar   / 2021 ஏப்ரல் 05 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலான் வங்கி தனது டிஜிட்டல் தயாரிப்பு தெரிவுகளில் புதிய உள்ளடக்கமாக ‘SeylanPay’ QR குறியீட்டின் பிரகாரம் அமைந்த கொடுப்பனவு தீர்வை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. வங்கியின் பயணத்தில் இந்த அறிமுகம் மிகவும் முக்கிய மைல்கல்லாக அமைந்திருப்பதுடன், பணப்பாவனை இல்லாத, கடதாசி பாவனை இல்லாத மற்றும் கிளைகளின் பாவனை இல்லாத வங்கியியல் மாதிரியை நோக்கிய வங்கியின் தந்திரோபாயப் பயணத்துக்கு வலுச் சேர்ப்பதாகவும், இலங்கையின் கொடுப்பனவு கட்டமைப்புக்கு வளமூட்டுவதாகவும் அமைந்துள்ளது.

SeylanPay அறிமுகம் தொடர்பில் செலான் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கபில ஆரியரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “வங்கியியல் மற்றும் நிதியியல் துறையின் எதிர்காலமாக டிஜிட்டல் வங்கியியல் அமைந்துள்ளது. SeylanPay QR வசதியை பல்வேறு நிலைகளில் சௌகரியமாகவும், பாவனையாளருக்கு நட்பான வகையிலும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதுடன், துறைக்கு சிறந்த உள்ளடக்கமாகவும் அமைந்துள்ளது. ஸ்மார்ட்ஃபோன்களைப் பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் கொடுக்கல் வாங்கல்களை முன்னெடுக்கக்கூடியதாக அமைந்திருக்கும். இலங்கையில் டிஜிட்டல் வங்கியியல் துறையில் முன்னோடியாக செலான் வங்கி அமைந்துள்ளதுடன், இணைய மற்றும் மொபைல் வங்கிச் சேவை, இணையக் கொடுப்பனவு கட்டமைப்புகள் மற்றும் விற்பனையாளர் போர்டல் சேவைகள் போன்றவற்றை அறிமுகம் செய்வதில் முன்னோடியாகத் திகழ்ந்து, சகல செலான் வாடிக்கையாளர்களுக்கு சௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. SeylanPay கொடுப்பனவுத் தீர்வு எமது வாடிக்கையாளர்களின் வேலைப்பளு நிறைந்த வாழ்க்கைக்கு சௌகரியத்தை ஏற்படுத்தும் என்பதுடன், இந்த வாய்ப்பை வழங்குவதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்.” என்றார்.

செலான் வங்கியில் நடைமுறை மற்றும் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தற்போது, தமது ஸ்மார்ட்ஃபோன் ஊடாக LANKAQR சான்று பெற்ற விற்பனை நிலையங்களில் டிஜிட்டல் முறையில் கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியும். மேலும், SeylanPay வாடிக்கையாளர்களுக்கு தமது கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகளை இணைத்து, தமது தினசரி கொடுப்பனவுகளை அட்டையில்லாத மற்றும் பணமில்லாத முறையில் பாதுகாப்பாக, எளிமையாக மற்றும் துரிதமான முறையில் சௌகரியமாக மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

செலான் வங்கியின் டிஜிட்டல் வங்கியியல் பிரிவின் தலைமை அதிகாரி சமிந்த செனெவிரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “SeylanPay QR கொடுப்பனவு தீர்வு அறிமுகத்துடன், செலான் வங்கி வாடிக்கையாளர்கள் தற்போது நாட்டின் டிஜிட்டல் கொடுப்பனவு புரட்சியில் அங்கம் வகிக்க முடியும். கொடுப்பனவு கட்டமைப்பு சௌகரியமானது என்பது மாத்திரமன்றி, வாடிக்கையாளர்களுக்கு வேகமாகவும் பாதுகாப்பான முறையிலும் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு உதவியாக அமைந்திருக்கும். சிறிய விற்பனை நிலையங்கள் மற்றும் தினசரி சம்பளம் பெறுவோருக்கு பணத்தை தூயமுறையில் திரட்டிக் கொள்வதற்கு சிறந்த தீர்வாகவும் அமைந்துள்ளது. செலவு குறைந்தது என்பதுடன், பாதுகாப்பு மற்றும் சௌகரியம் நிறைந்தது.” என்றார்.

செலான் வாடிக்கையாளர்கள் SeylanPay app ஐ இலகுவாக பதிவிறக்கம் செய்து, எளிமையான படிமுறைகளைப் பின்பற்றி பதிவு செய்து கொள்ள முடியும். App பதிவு செய்யப்பட்டதும், எந்தவொரு EMVCo நியம Visa, MasterCard மற்றும் LankaQR முறையிலான கொடுப்பனவுகளை ஏற்றுக் கொள்ளும் விற்பனை நிலையங்களில் இலகுவாக Scan செய்து கொடுப்பனவை மேற்கொள்ளலாம். கொடுப்பனவு பூர்த்தி செய்தவுடன் அதனை உறுதி செய்யும் அறிவுறுத்தல் வாடிக்கையாளர் மற்றும் விற்பனையாளர் இரு தரப்புக்கு அனுப்பப்படும். விற்பனையாளரின் கணக்கில் உடனடியாக பணம் வைப்புச் செய்யப்படும் என்பதுடன், விற்பனை சுயமாக அறிக்கை வடிவில் தயாரிக்கப்படும். வாடிக்கையாளர்கள் தாம் மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான தெளிவான விவரத்தை கொண்டிருக்க முடியும். SeylanPay விற்பனை நிலையங்கள் தமக்குரிய கொடுப்பனவுகளை செலான் வங்கி மற்றும் இதர வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து அந்தந்த வங்கிகளின் Visa, MasterCard மற்றும்/அல்லது LANKAQR QR குறியீட்டுக்கு பொருந்தும் மொபைல் கொடுப்பனவு அப்ளிகேஷன்கள் ஊடாக கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ள முடியும். SeylanPay ஊடாக சிறிய முதல் பாரிய வியாபாரங்கள் வரை கொடுப்பனவுகளை ஏற்று, தமது விற்பனை புரள்வு மற்றும் வியாபார வளர்ச்சிக்கு உதவக்கூடியதாக இருக்கும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X