2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

Singer Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்

J.A. George   / 2020 செப்டெம்பர் 02 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

Fashion துறையில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துள்ள Singer Fashion Academy, இன்று பெண்களுக்கான சிறந்த தொழிற்றுறை வழிகாட்டியாகவும் உள்ளது.

நாடளாவிய ரீதியில் சுமார் 70 கிளைக் கொண்டு இயங்கும் Singer Fashion Academy இல், அடிப்படையில் இருந்து தையல் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. சான்றிதழ் கற்கைநெறிகள், டிப்ளோமாக் கற்கைநெறிகள், சிறுவர்களுக்கான தையல் பயிற்சிகள் என 20க்கும் மேற்பட்ட கற்கைநெறிகளை Singer Fashion Academy வழங்குகின்றது.

இதனால், சிறுவர்கள் முதல் இல்லத்தரசிகள் வரை பலர் பயன்பெறுகின்றனர். Singer Fashion Academy இல் தையல் பயிற்சி பெற்ற பலர், இன்று தமக்கென தனியான தையல் தொழில் நடவடிக்கைளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்கின்றனர்.

இதன்படி, இல.579, காலி வீதி, வெள்ளவத்தை எனும் முகவரியில் அமைந்துள்ள Singer Finance கட்டடத்தில் இயங்கும் Singer Fashion Academy கிளையில், “Certificate in Fashion Designing” கற்கைளுக்கான மாணவர் உள்ளீர்ப்பு தற்போது ஆரம்பமாகியுள்ளதாக, அதன் ஆசிரியை ரோஸ் வேர்ஜினி விஜேபண்டார தெரிவித்தார்.

இங்கு தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மும்மொழிகளிலும் தையல் பயிற்சிகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலதிகத் தகவல்களுக்கு 0776080196 எனும் அலைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொள்ளவும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--